என்னிடம் மருத்துவம் ஆலோசனை பெற்று வரும் சரோஜா என்பவரின் 35 வயது நிரம்பிய மகள் ரேணுகா விற்கு அதிகாலையிலிருந்து வயிறு வலியால் மிகுந்த அவதி படுவதாகவும் ஹோமியோபதி மருந்து அவரது கனவரிடம் கொடுத்து உதவுங்கள் என்று செல் பேசி முலம் கேட்டுக்கொண்டார். வயிறு வலி தொடர்பான சில விபரங்களை கேட்டு விட்டு அவரது கனவரிடம் வயிறு வலிக்கான மருந்துகளை கொடுத்து அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழித்து வயிறு வலி குறையவே இல்லை. நேரில் வந்து மகளை பார்த்து சிகிட்சையளிக்குமாறு ம் அக்குப்பங்சர் சிகிட்சை வழங்க முடியுமா? என கேட்டார். செல் பேசியில் ரேணுகாவிடம் சில விபரம் கேட்டபோது சிறுநீரககல்லினால் ஏற்பட்ட வயிறு வலி என்பதை யூகிக்க முடிந்தது. உடனே வருகிறேன்.என்று அக்கு ஊசிகளூம் சிறுநீரகல் கோளாறுகளுக்கான ஹோமியோபதி மருந்துகளும் எடுத்து சென்றேன்.அக்குபங்சர் போட்டதும் சில விநாடிகளில் வயிறு வலி குறைந்தது.கொண்டுபோன மருந்துகளையும் பயண் படுத்தினேன். சிறிது நேரம் மட்டும் குறைந்த வயிறு வலி மீண்டும் தலை தூக்கியது.நான் எதிர் பார்த்த பலன் கிடைக்க வில்லை. ரேணுகாவின் நடவடிக்கைகளை உண்ணிப்பாக கவணித்தேன்.வலிதாங்கமுடியாமல் கட்டிலில் படுக்கிறார், சில விநாடிகளில் எழுந்து தனது அம்மாவின் தோளில் சாய்கிறார்.பின் அக்காவின் தோளில் சாய்கிறார்.அமைதியற்ற தன்மையை காண முடிந்தது. வயிறு வலியுடன் எரிச்சல் உள்ளதா? என கேட்டேன் இல்லை என்றார். இவருடைய நடவடிக்கைகள்: ஆர்சனிக்கம் ஆல்பம்” என்ற ஹோமியோபதி மருந்தை சுட்டி காட்டுகிறதே. ஆனால் ஆர்சனிக்கத்தின் மற்றொரு முக்கிய குறியான எரிச்சல் இல்லையே என யோசித்தேன்.ஒரு மருந்தின் மிக முக்கியமான குறிகளில் ஒன்று அதுவும் பல மான குறியாக அமைந்துவிட்டால் வேறு அறிகுறிகளை ஆராயவேண்டாம் ..அம் மருந்தே அந் நபரை முழுமையாக குணப்படுத்தும்.என்ற ஹோமியோபதியின் தந்தை ஹானிமனின் பொன்மொழி நினைவுக்கு வந்தது. சற்றும் தாமதியாமல் மருத்துவமனை வந்து :ஆர்சனிக்கம் ஆல்பம்: 200 வது வீரியத்தில் 10 மாத்திரையை 50 மில்லி தண்ணீரில் கலக்கி ஒருஸ்டீஸ் பூன் அளவு குடிக்க செய்தேன். இரண்டு நிமிடத்தில் தூங்கி விட்டார். நாணும் பத்து நிமிடம் ரேணுகாவை பார்த்து கொண்டே கனவர்,அக்கா,அம்மா, அப்பா ஆகியோருடன் பேசிக்கொண்டேயிருதேன். ரேணுகா ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிட்டார் மறு வேளை மருந்து தேவைப்படவேஇல்லை. இது என்ன தூக்க மருந்தா எனக் கேட்டார்கள் வீட்டில் இருந்தவர்கள். இவ்வளவுநேரம் வலி தாங்கமுடியாமல் போரடிக்கொண்டிருந்தார்.இப்போது வலி குறைந்து விட்டது. போரட்டக் களைப்பினால் தற்போது உடல் அமைதி பெறுகிறது. அதனால் ஆழ்ந்து தூங்குகிறார். ஆர்சனிக்கம் ஆல்பம் நிகழ்த்திய அதிசயத்தை பார்த்து அசந்து போனேன்.
நலம்
ஹோமியோபதி, மலர்மருத்துவம் எனது பார்வையில்
வெள்ளி, 21 மார்ச், 2014
திங்கள், 27 ஜனவரி, 2014
தலைவலியை தீர்க்கும் ஹோமியோபதி மருந்துகள்.
பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பல்கலைக்கழகத்துணைவேந்தர் வரை, வாழ்வின் அனைத்து மட்டங்களிலுள்ள சகலரையும் தலைவலி விட்டு வைப்பதில்லை.ஆண்களைக்காட்டிலும் பெண்கள் அதிகளவில் அவதிக்குள்ளாகின்றனர்.. குறிப்பாக ஒருபக்க தலை வலியால் (migraine) மிகப்பெரியளவிற்கு சிரமப்படுகின்றனர். தலை தோன்றிய நாள் முதல் தலைவலியும் தோண்றியிருக்ககூடும் என்பதை அறிய முடிகிறது. ஆங்கில மருத்துவத்தின் தந்தை எனப்படும் மருத்துவர்,ஹிப்போகிரேட்டஸ் காலத்திலும், அதற்கு முன்பும் நோயை கடவுள் தனக்கு வழங்கிய தண்டனையாக மக்கள் நினைத்து வந்தனர்..அக்காலத்தில் தலைவலி தோன்றியதற்க்கான காரணத்தை அறிய முடியாவிட்டாலும் வாந்தியினால் தலைவலி குறைகிறது என்பதை அனுபவ பூர்வ மாக உணர்ந்தனர். அதனால் தலைவலியால் துடிப்போரை வாந்தி எடுக்க செய்தனர். சிலர்மயங்கி விழுந்தனர், சிலர் தப்பித்தனர். தலையிலிருந்து இரத்தத்தை வெளியேற்றுவதன் முலம் குணமடையலாம் என்று ஒரு ருபாய் நாணயம் அளவில் தலையில் துவாரமிட்டு இரத்தத்தை வெளியேற்றி சிகிச்சையளித்தனர். அட்டை பூச்சியை உடலில் விட்டு இரத்தத்தை உறிஞ்ச செய்தனர். இதனல் அட்டைகள் கொழுத்து வளர்ந்தன. தலைவலி தணிந்த பாடில்லை. . காரணம் சுற்றுப்புற சுழல் மாற்றங்களினாலும், இடமாற்றம்,உயர்ந்த மலைப்பகுதி, தானத உணவு, மினுங்கும்விளக்கு, வாசனைத்திரவியங்கள், சிகரெட் புகை,சத்தமான பெரிய ஒசைகள், கடுமையான வெயில் தாக்குதல் போண்றவற்றினாலும் செல் பேசியை அதிக நேரம் வைத்து பேசுவதால் கழுத்து பகுதியில் ஏற்படும் இறுக்கத்தாலும் கணிணி முன்பு அதிக நேரம் பணிபுரிவதால் உடலில் ஏற்படும் இறுக்கம், மன இறுக்கம் காரணமாக மற்றும் அனாசின்,ஆஸ்பிரின் மற்றும் உடல் வீக்கத்திற்க்காக சாப்பிடும் மாத்திரைகளாலும் வெண்னைய், சாக்லெட், ஜஸ்கிரீம், இவைகளில் உள்ள டைரமைன் (dieramaine) என்ற வேதிப்பொருள் தலைவலியை எற்ப்படுத்துகிறது.
பெண்களுக்குமுதல் மாதவிடாய் வெளிப்படும் காலம், மற்றும் மாதாஎதிரப்போக்கு வெளியேறும் சமயங்களிலும் விடாய் நிரந்தரமாக நிற்கும் சமயங்களிலும் (menophuse) ஈஸ்ட்ரோஜண் எனும் ஹார்மோன் சுரப்பு குறையும் போதும் (oestrogen) கருத்தடை மாத்திரை உட்கொள்வதாலும் குளிர்ச்சியான காய்கறி, மதுபானம் ,வெங்காயமும் சிலருக்கு தலைவலியை உருவாக்கும். தலை வலியின் போது காபி குடித்தால் கேஃபைன் (cacepine) என்ற வேதிப்பொருள் தலைவலியை குறைக்கும். அதிகமாக காபி குடித்தால் தலைவலி வரும். மன அழுத்தம்,மன உளைச்சல் உணர்ச்சிவசப்படுதல், களைப்புமிகுதியால், தூக்கமிண்மையாலும் தலைவலி தோன்றுகிறது. தாய்,தந்தை இருவருக்கும் தலைவலி இருந்தால் குழந்தைகளுக்கு 75 சத வீதம் தலைவலி வருவதற்கான வாய்ப்பு உள்ளது.இருவரில் ஒருவருக்கு தலைவலி இருந்தால்40 சதவீதம் தலைவலி வரும் வாய்ப்பு உள்ளது. ஆறு வயதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குட்பட்டவர்களிடம் ஒரு பக்க தலைவலி அதிகமாக காணப்படுகிறது.. ஒரு பக்க தலைவலி தோன்று வதற்கு முன்னறிகுறியாக பதினைந்து சதவீதமானவர்களுக்கு பார்வையில் பிரச்சனையை தோற்றுவிக்கிறது கண்களுக்கு முன்னால் பனிப்படலம் , கண்னை கூசச்செய்கிறஒளியும், வண்ண, வண்ணப்புள்ளிகளும் தோண்றும். இவ் வகைதலைவலியானது சுமார் ஒருமணி நேரம் இருக்கும்.. பார்வையில் பிரச்சனை இல்லாமல் ஒரு பக்கத்தில் மட்டும் தலைவலி தோன்றுகிறவர்க்ளுக்கு நாலரை மணி நேரத்திலிருந்து இரண்டு நாள்வரை வலிநீடிக்கும். விண், விண் என்ற வலியுடன் நோயளியை வேறு வேலை எதுவும் செய்ய இயலாத நிலைக்கு இட்டுச் செல்லும்.
. படி எறுவது போன்ற சிறிய உடல் அசைவுகளாலும் கண் இமையைக் கூட அசைப்பதால் தலைவலி மேலும் அதிகமாகும். .குமட்டல், வாந்தி, மயக்கமும் ஏற்படும்.சுத்தியால், சம்மட்டியால் அடிப்பது அடிப்பது போலவும் தலையின் ஒர்பி்் ியால் சொருகுவது போலவும் வலி இருக்கும். வாரம் ஒருமுறை, அல்லது மாதம் ஒரு முறை என முறை வைத்து தலைவலி தோன்றும். பல்ளி மாணவர்கள், மாணவிகள், பாடங்களை கூர்ந்து கவணித்து பாடங்களை படிப்பதாலும் ஆசிரியர் கரும் பலகையில் எழுதும் எழுத்துகளை கூர்ந்துகவனிப்பதாலும் தலைவலி தோன்றும். சிகிச்சை, ஆக்கில மருத்துவ முறையில் தலைவலின் நிவாரணியாக ஆண்டுக்கு 16000 டன் ஆபிரின் விற்பணையாகிறது. ஹோமியோபதி மருத்துவ முறையில் தலைவலிக்கு சிகிச்சை பெற வருகிற அனைவருக்கும் ஒரே மாதிரியான வலி நிவாரண மாத்திரைகள் வழங்குவதிலை. தலைவலி தோணறியதற்க்கான காரணம், வலியின் தன்மை, நோயளியின் உடலமைப்பு, வலியின் போது உருவாகும் மனநிலை,மன உணர்ச்சியில் எற்ப்படும் மாறுபாடுகள்,என முழு மனிதனையும் ஆய்வு செய்து மாத்திரைகள் வழங்குவதால் பல ஆண்டுகள் தலைவலியால் தவிப்போரும் துடிப்போரும் உடனடு நிவாரணமும் விரைவில் முழு நலமும் பெறலாம். தலைவலியை குணமாக்கும் ஹோமியோபதி மருந்துகள். பிரையோனியா: தலையில் இரத்த தேக்கத்துடன் தலைவலி. மலச்சிக்கல் காரணமாக ஏற்படும் தலைவலி. அடுப்பின் அருகே இருப்பதால் நெருப்பின் அருகே இருப்பதால் தலைவலி. குனிந்தால் ,இருமினால், தும்மினால் வலி அதிகமாகும்..கண் இமையை திற்ந்தாலேவலி அதிகரிக்கும். முச்சு விட்டால் கூட வலி அதிகரிக்கும். ஒய்வினாலும் அசைவின்றி படுத்திருந்தால் வலி தணியும். நேட்ரம் மூர்:முன் நெற்றி புருவங்களில் வலி அதிகமிருக்கும்.மானவ , மாணவியரின் தலைவலி, கண் களை அதிகம் பயண் படுத்தியதால் ஏற்படும் தலைவலி. விடாய் முடிந்ததும் வரும் தலைவலி. சுத்தி, சம்மட்டியால் அடிப்பது போன்ற வலி. தலைவலின் போது கண்ணிலிருந்து நீர் வடிதல். இக்னேஹியா:மனவருத்தத்தால் ஏற்படும்தலைவலி அன்புக்குரியவர்களை இழந்ததால் உண்டாண வலி. தலையில் ஊசியால் அல்லது ஆணியை செலுத்துவது போன்ற தலைவலி. தரையில் படுத்திருந்தால் வலி குறையும். சாங்கினேரியா: ஏழு நாட்களுக்கு ஒரு முறை வரும் தலைவலி. பின் தலையில் துவங்கி வலது நெர்றி பொட்டில் வந்து வலி தங்கும். பித்த வாந்தியுடன் சம்மட்டியால் அடிப்பது போன்ற வலி. மிக கடுமையான வலி. காலையில் துவங்கிய வலி வெயில் ஏற, ஏற வலி அதிகரித்து சூரியன் மறையும் போது வலி தணியும்.. பெல்லடோனா; நெற்றி பொட்டில் துடிக்கும் வலி. வெடிக்கும் வலி. முகம் சிவந்து சூடாக இருக்கும். வலி திடீரென தோன்றி திடீரென மறையும். அதிக வெளிச்சத்தால், சத்தத்தினால், வலி அதிகமாகும். ஒய்வின் போதும் இருட்டில் இருக்கும் போதும் வலிதணியும். க்குளாய்ன்; கடுமையான் வெயிலில் அலைந்ததால் சூரிய ஒளி தலையில் நேராக படுவதால் கேஷ் லைட் வெளிச்சத்தில் பனிபுரிவதால், மாதவிடாய் வெளியாகதிதினால்வ்ரும் தலைவலி. நன்றாக தூங்கி எழுவதால் தலைவலி குறையும். குட்டி தூக்கத்தினால் வலி குறையாது அய்ரிஸ் வெர்சி கலர்; முறை வைத்து வரும் பித்ததலைவலி, வலி வருவதற்கு முன்பாக பார்வை மூடு பனியில் பார்ப்பதுபோலிருக்கும். கசப்பான வாந்தி எடுத்தபின்பு வலி குறையும். ஸ்பைஜிலியா; கடுமையான நரம்புத்தலைவலி பின் தலையில் துவங்கி இடது புருவத்தில் வந்து தங்கும். நடந்தால் வலி அதிகமாகும். தலையை உயரமாக வைத்து படுத்தால் வலி குறையும், பல்சடில்லா; கொழுப்பு நிறைந்த உணவுகள், ஐஸ் கிரிம் சாப்பிட்டதால் உணடான தலைவலி. ஆண்டிக்குரு; கோடை காலத்தில் குளிர்ந்த நீரில் குளித்ததால் தலைவலி தலைவழியே குளித்ததால் வரும் தலைவலி. சிபிலினம்; இரவு முழுவதும் தலைவலி. பொழுது விடிந்ததும் தலைவலி குறையும், லாச்சசீஸ்; தூக்கத்தில் தலை வலி தோன்றும் அல்லது தூங்கி எழுந்ததும் தலைவலி அதிகமாகும்.மாதவிடாய் தோன்றாமையால் அல்லது வெளியாகமையால் தோன்றும் தலைவலி. ஆரம் மெட்; இரவில் தூங்கும் போது தலைவலி வந்துவிட்டால் எழுந்து நடமாடுவார். டியுபர்குலினம்; தலைவலி தாங்க முடியாமல் சுவற்றில், மரத்தில் மோதுவார்.. அசட்டிக் அசிட்; புகையிலை, அபினி, காபி, சாராயம், அளவு மீறி உபயோகித்தால் வரும் தலைவலி. அகேரிகஸ்; மது அருந்தியதால் தலைவலி. நணபர்களே வித, விதமான தலைவலிகளுக்கும் வித்தியாசமான தலைவலிகளூக்கும் ஹோமியோபதில் நிச்சயம் தீர்வு உண்டு,,உங்களுக்கு அருகில் ஹோமியோபதி மருத்துவ நிபுனரை சந்திக்கவும்.
திங்கள், 13 ஜனவரி, 2014
வாழ்க்கை மாற்ற நோய்கள்---ஹோமியோ,மாற்று மருத்துவ தீர்வுகள்...
இயந்திரத்தனமான பரபரப்பான வாழ்வில் நாள் தோறும் மக்கள் எப்படியெல்லாம் நோய்களை விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள் (கண்களை விற்று சித்திரம் வாங்குவதைப்போல, சரியான பாதை என நினைத்து மீண்டு வர முடியாத அதல பாதாளத்தில் வீழ்ந்து மடிவதைப்போல.) இக்கால சமுகம் மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது .ஒடி, ஒடி உழைத்து சேர்த்த பணத்தை மருத்துவதிற்கே செலவு செய்ய வேண்டிய நிலை நீடித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு என்னதான் தீர்வு, என்பதை இப்புத்தகம் அழகாக விள்க்குகிறது.மக்கள் ஆரோக்கியமாக வாழ அக்கறையுடன் சிந்தித்து உருவாக்கப்பட்ட புத்தகம் என்பதை வாசிக்கும் போது உணர முடிகிறது. 61. கட்டுரை, 176,பக்கங்கள்... மூன்று பகுதிகளாக பிரித்து அழகு தாளில் உறுதிமிக்க பைண்டிங்கில் உள்ள இப்புத்தகம் வாழ் நாள் முழுவதும் படித்து பாதுகாக்க வேண்டிய புத்தகம் இது. வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக அன்றாட வாழ்வில் காலை எழுந்தது முதல் இரவு தூங்கச்செல்லும்வரை நாம் எவ்வளவு நச்சு நி றைந்த உணவு,காற்று, நீர் போன்ற வற்றால் ஏற்படும் பல்வேறு நோய்களிலிருந்து தப்பிக்க என்ன வழி என்ப்தை மருத்துவ ரீதியாக இப்புத்தகம் அலசுகிறது பாஸ்ட் புட் அது வேஸ்ட் ..... நொறுக்கு தீனியால் ஏற்படும் ஏற்படும் ஆபத்து ஐஸ் வாட்டர் ஆபத்து... மரபனு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளால் உருவாகும் ஆபத்து... பற் பசைகள் குறித்த எச்சரிக்கை... இருதய நோய்கள், சிறு நீரகசெயலிழப்பு போன்ற பெரு நோய்ளுக்கு மாற்று மருத்துவ தீரிவுகள் முன் வைக்கப்பட்டுள்ளன, இக் கால கட்டத்தில் குழந்தைகள் சந்திக்கும் சவால் களுக்கு அழகான தீர்வுகள் ஹோமியோபதி பிரிட்டன் மலர் மருத்துவத்தில் உள்ளன. என்பதை தெளிவாக அறிவியல் பூர்வமாக மிகத்தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது, ஒவ்வொரு கட்டுரை வாசித்து முடிக்கும் போது நம்மையே அறியாமல் வாழ்வில் எவ்வளவு தவறுகள் செய்கிறோம் என்கிற உணர்வு அதை திருத்திக்கொள்ள உள்ளத்தில் உந்து சக்தி உருவாவதை உணர முடிகிறது.. மாற்று முறை மருத்துவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். திருமண நாள்,, பிறந்தநாள்,கொண்டாடுவோருக்கும் மனதுக்கு பிடித்தமான நண்பர்களுக்கும் பரிசளிக்க மிக பொருத்த மான புத்தகம். பள்ளிகள் கல்லூரிகள், நூலகங்களில் வாங்கி பயன் படுத்த வேண்டிய நூல்..
நூல் ஆசிரியர்கள்: டாக்டர். எஸ்.வெங்கடாசலம் டாக்டர். வெ.ஆவுடேஸ்வரி
வெளியீடு:; தீபா பதிப்பகம் 29/ 9.A பழைய டிரங்க் ரோடு. சாத்தூர்--626203 செல்;9443145700 போன்;04562 263168 விலை. ரூபாய்; 100 மட்டும்
செவ்வாய், 31 டிசம்பர், 2013
குற்ற உணர்வை குணமாக்கிய மலர் மருந்து.
,,சமிபகாலமாய் தனிமையில் இருக்கும் போதெல்லாம் நீ குற்றவாளி , நீ தவறு செய்து விட்டாய் உனக்கு மோட்சமே கிடைக்காது.என்றுஉள் மனது என்னை குற்றம் சாட்டிக்கொண்டே இருக்கிறது. தினசரி நாளிதழ் களில் வெளிவரும் கொலை செய்திகள் கூட நான் சொல்லித்தான் கொலைகள் நடந்து செய்தி வெளியாகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது.
இதனால் மனநிம்மதி போய்விட்டது.எனது குழந்தையை சரியாக கவனிக்கமுடியவில்லை.எனது ஆசிரியபனியையும் சரிவர செய்யமுடியவில்லை, மற்ற ஆசிரியர்களூடனும் கனவருடனும் மகிழ்ச்சியாகவும் மனம் விட்டு பழக , பேச முடியவில்லை. பள்ளியில் மாணவர்கள் தவ்று செய்தாலோ நீ தான் பொறுப்பு ,நீ ஆசிரியப்பனிக்கு பொறுத்தமில்லதவள் என்கிறது என் உள்மனது. சுசிலாவுக்கு பாட்ஜ் மலர்மருத்துவத்தில் pine எனும் மருந்து 15 நாள் கொடுத்ததில் அருமையான முன்னேற்றம். ஒரு மாத சிகிச்சையில் நன்கு குனமடைந்தார் மன நல பிரச்சனைகளூக்கு மலர் மருத்துவம் மிகசிறந்தது.உலக சுகாதார நிறுவனம் அங்கிரித்த உன்னத மான் சிகிச்சைமுறை.
லேபிள்கள்:
படித்ததில் பிடித்தது,
மருத்துவ அனுபவம்,
முகப்பு
வெள்ளி, 13 டிசம்பர், 2013
குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஆண் - பெண் பாகுபாடின்றி அனைவரும் செரிமானக் கோளாறுகளுக்கு ஆட்படாமல் தப்பித்து இருக்க முடியாது. நாம் உண்ணும் உணவிலுள்ள மாவுச்சத்து, புரதச்சத்துக்களை பிரித்து இரத்தத்தில் சேர்ப்பதற்காக இரைப்பையில் சுரக்கும் அமிலநீர் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் சுரப்பதால் இரைப்பையில் உள்ள உணவு செரிமானம் ஆகாமல் உணவுக்குழாய் வழியாக மேல் நோக்கி எதுக்களித்து வருவதால் நெஞ்சுஎரிச்சல், புளித்தஏப்பம் ஏற்படுகிறது.
காரணம் :
உணவில் மசாலா மற்றும் காரமான, நறுமணமுள்ள உணவுப் பொருட்கள் அதிகளவில் சேர்ப்பதாலும், மிளகாய்,ஊறுகாய், உணவின் சுவையை அதிகரிப்பதற்காக அதிகளவில் பயன்படுத்துவதாலும் இடைவிடாது புகைப்பதாலும்,அதிக கவலை, மன அழுத்தம், மனஇறுக்கம் அதிக உணர்ச்சிவசப்படுவதாலும், அடிவயிறு அறுவை சிகிச்சையின் காரணமாக கிருமி தொற்று ஏற்படுவதாலும், ஆஸ்பிரின், கிருமி கொல்லி வலி நிவராணி மருந்து மாத்திரைகள் போன்றவைகளை நீண்ட காலம் உட் கொள்வதாலும், விருப்பமான உணவுகளை விருப்பமான நேரங்களிலெல்லாம் வயிறு புடைக்க சாப்பிடுவதாலும், மனிதன் உயிர்வாழ்வதற்காக உணவு சாப்பிடுவது என்பதற்கு பதிலாக உணவு சாப்பிடுவதற்காகவே உயிர் வாழ்வது என்ற கொள்கையில் உறுதியாய் உடையோர்கள் Fast food அதிகளவில் உண்போர்கள் வயிறு பசிக்காத நேரங்களில் கடிகார நேரப்படி உணவு விசயத்தில் தாரளமாய் நடந்து கொள்பவர்கள். பணம் செலவு செய்து தயார் செய்த உணவுகளை பயன்படுத்தியது போக மீதமுள்ள உணவுகளை கெட்டுப் போய்விட்டால் குப்பையில் கொட்ட வேண்டுமே என்று இரைப்பையை குப்பைத் தொட்டியாக ஆக்கி கொள்வதாலும், அஜீரணமும், இரைப்பை அழற்சியும், வாய்ப்புண்களும், an style="font-family:Latha;mso-bidi-language:TA" lang="TA">இரைப்பை, சிறுகுடல் புண்களும் ஏற்படும் இரத்தசோகை உள்ளவ ர்களுக்கு இயற்கையாகவே குடல்புண் வரும் வாய்ப்புக்கள் அதிகம்.
இரைப்பை அமிலநீர் சுரப்பின் ஆரம்ப அறிகுறிகள் (Primary Hyper Acidity):
உணவு உண்டவுடன் மேல் வயிற்று பகுதியில் மந்தமானதொரு நிலையான வலியேற்படுதல். அதிகளவு உணவு மற்றும் வேறு காரணங் களுக்காக உட்கொள்ளும் ஆங்கில மாத்திரை களாய் குமட்டலும், வாந்தியும் தோன்றுதல்,நன்றாக சாப்பிட்டு வரும் காலங்களில் இடையிடையே பசிமந்தம் அல்லது பசி இல்லாத நிலை, ">புளித்த ஏப்பம். நெஞ்சுஎரிச்சல், சிறிது சாப்பிட்டாலும் வயிறு நிறைதல் அல்லது சாப்பிட்ட அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் சாப்பிட தோன்றுதல் வயிறு உப்புசம், வாயு தொந்தரவுகள், இரைப்பையிலிருந்து இரத்த வாந்தி அல்லது மலத்தில் ரத்தம் வருதல் மிகை அமிலச்சுரப்பு நீடித்தால் இரத்த சோகை ஏற்பட்டு முற்றிய நிலையை நோக்கி முன்னேறும். இந்நோயை குணப்படுத்தாமல் அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் விட்டு விட்டால் இரைப்பையில் புண் உண்டாகி இரைப்பையில் துளையை ஏற்படுத்தி விடும்.
Secondary Hyper Acidity:
இந்நோய் இரண்டாவது நிலையை அடையும் போது உண்ட உணவு உணவுக்குழாய் வழியாகபுளிப்பு, எரிச்சலுடன் எதிர்த்து வருதல். இவ்வாறு எதிர்களித்து வருவதால் உணவுக் குழாயின் உட்புற தசைகள் சேதமடையும்.
அறிகுறிகள் :
நெஞ்சுஎரிச்சல் நடுமார்பின் அடிப்பகுதியில் பின்பகுதியில் ஏற்படும் எரிச்சல் வலி மேலேறிவரும் பெரும்பாலும் வலி உண்டபின் வரும் இரவுபடுத்தவுடன் வலி அவ்வப்போது தலைகாட்டுவதால் இரவுதூக்கத்தை கலைக்கும். மீண்டும் தூங்குவதற்கு சில மணி நேரங்கள் ஆகும். தூங்க முடியாமல் அவதிப்படுவார், தொடர்ந்து எதுக்களித்தல் இருப்பதால் தொண்டையில் புண் ஏற்படும். சிலருக்கு குனிந்தாலே எதிர்களிப்பு வாய்வரைவரும். தொடர்ந்து எதிர்களிப்பு இருப்பதால் தொண்டையில் சிறு பந்து அடைத்து கொண்டது போன்ற உணர்வு ஏற்படும். உடல் பருமன் உள்ளவர்களுக்கு நிறைய எதிர்களித்து வரும். இவர்களிடம் புகை பழக்க மிருந்தால் உடனே நிறுத்தி உண்ணும் உணவின் அளவை குறைக்க வேண்டும். சிறிது சாப்பிட் டாலும் எதிர்களிப்பு வரும் நபர்கள் மது,கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். முற்பகலிலும், மாலையிலும் கண்டிப்பாக சிற்றுணவு கூடாது. இது போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் குனிந்து செய்யும் வேலையை தவிர்க்க வேண்டும். தலையணையை சற்று உயரமாக 15 to 30 செ.மீ உயரமாக வைத்து படுக்கலாம்.
Dueodinal ulcer:
முன்சிறு குடலில் புண் இருந்தால் பசி நேரத்தில் வயிற்றில் வலியேற்படும். அப்போது ஏதாவது சாப்பிட்டால் வயிறு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். சாப்பிடாவிட்டால் முன் சிறுகுடலில் உற்பத்தியாகும் அமிலநீர் மேலேறி வந்து இரைப்பையை புண்ணாக்கும். எனவே இந்நோயாளிகள் பிஸ்கட், பழங்கள் கைவசம் எப்பொழுதும் வைத்திருப்பார்கள்.
இரைப்பைபுண் (Peptic ulcer) :
உண்ட உணவு இரைப்பையில் உள்ள புண்ணை தாக்கும் போது சாப்பிடமுடியாது. நாளுக்கு நாள் உடல் மெலியும்,ஆரம்பநிலையில் எரிச்சல் இருக்கும். புண்ணாகிப் போனால் வலி ஏற்படும். சில சமயங்களில் இரைப்பையின் மேல்பாகத்தில் புண் ஏற்பட்டு வலி தோன்றும் போது இருதய வலியாக இருக்குமோ என்றும் தனக்கு மாரடைப்பு தோன்றிவிடுமோ என்ற பயம் நோயாளிக்கு தோன்றும் இச்சந்தேகங்களுக்குரிய பரிசோதனைகள் மூலம் விடை காண முடியும்.
நவீன மருத்துவம் என்று தனக்குதானே பெயர் சூட்டி மகிழ்ந்து கொள்ளும் ஆங்கிலம் மருத்துவ முறை செரிமானக் கோளாறுகளுக்கு உடனடி நிவாரணம் என்ற பெயரில் அமில முறிவு மருந்துகளால் தற்காலிக நிவாரணம் மட்டுமே வழங்க முடியும், கூடவே பக்கவிளைவுகளாக அதிக உணர்ச்சி வசப்படும் தன்மை, சின்ன விசயத்தையும் பெரிதாக்கும் அதிகப்படியான உணர்ச்சிகளை உடலளவிலும் மனதளவிலும் உருவாக்குவதோடு சில சமயங்களில் தற்கொலை எண்ணங்களும் தோன்றும். செரிமானக் கோளாறுகள், எதுக்களித் தல், நெஞ்செரிச்சல் போன்ற கோளாறுகள் துவக்க நிலையிலே தென்படும்போது புகை, மது, நிறுத்திவிட்டு, அடிக்கடிமன அழுத்தம் ஏற்படாத வாறு பார்த்துக்கொண்டு தேவையற்ற ஆங்கிலம் மாத்திரைகளை தவிர்த்திட முயல வேண்டும்.
ஹோமியோபதி சிகிச்சை :
யோமியயோபதி மருத்துவ முறையில் நோய் வாய்ப்பட்டவரின் நோய்க்கான மூலக் காரணத்தை கண்டறிவதோடு. அச்சமயத்தில் நோயாளிக்கு ஏற்படும் மன உணர்ச்சிகளையும் கவனத்தில் கொண்டு முழுமனிதனையும் ஆய்வு செய்து மருந்து தேர்வு செய்யப்படுவதால் உடனடி நிவாரணமும் விரைவில் முழுநலமும் கிடைக்கும்.
1. ஆங்கில மாத்திரைகளால் வாயும், வயிறும் புண் ஏற்பட்டால் - போராக்ஸ்
2. அல்சர் வரும் உடல் வாகு உள்ளவர்களுக்கான மருந்து - யுரேனியம் நைட்.6.
3. அஜீரணம், பசியற்ற தன்மைகளுக்கு பொதுவான மருந்து அசைவ பிரியர்களுக்கும் ஏற்றது. - அல்லியம் சட்டிவம்30.
4. புகைப்பதால் ஏற்படும் நெஞ்சுஎரிச்சல் - செபியா 30.
5. இரைப்பை புண், வாய்ப்புண், வாய் துர்நாற்றம் - காலிகுளோரிகம் 30.
6. இரைப்பையிலிருந்து வாய்வரை எதுக்களித்து பற்களில் கூச்சத்தை ஏற்படுத்துதல் - ரொபினியா 30.
7. வயிறு உப்புசம் கடுமையான வலி, இரைப்பை வேக்காடு ஜீரணம் ஆகாத உணவுப்பொருட்கள் வாந்தியாதல் - லாக்டிப்ளரோட்டம்
8. பசியின் போது வயிற்றில் கடிக்கும் தன்மையுடன் வலி ஏற்பட்டால்- அனகார்டியம்
9. பசியில்லாமல் வயிற்றில் கடிக்கும் தன்மையுடன் வலி ஏற்பட்டால்- நக்ஸ்வாமிகா
10. இரைப்பை புண்களுக்கான இடை மருந்தாகவும், புண் பெரியதாகிய நிலையில் இருந்தால் - ஆந்திராசினம் 1ங
11. .இரைப்பையிர் எரிச்சலுடன் பிசையும் வலி. சாப்பிடும் போது, பின்பும் குமட்டல் வாந்தி வலி சிறிய இடத்தில் மட்டும் இருக்கும் - காலிபைக்ரோமிகம்
12. வயிறு வலியினால் இரவில் விழித்துக் கொள்ளுதல் பித்தமோ, ஜீரணமாகாத உணவுப்பொருட்கள் வாந்தியாதல் குளிர்ந்த நீர் குடித்தால் வலி குறையும். - அர்ஜெண்டம்நைட்
13. உண்டபின் வயிற்றில் கனம், வலி, எரிச்சல், குளிர்ச்சியாக குடித்தால் ஒத்துக்கொள்வதில்லை - கல்கேரியா ஆர்ஸ்
14. உணவுக்குழாய் முழுவதும் எரிச்சல், வெந்நீரை ஊற்றி வெந்து போனது போலிருத்தல். இரைப்பையில் எரிச்சல்,புளிப்பான, கசப்பான வாந்தி. - ஐரீஸ்வெர்சிகலர்
அல்சர் நீங்க அருமையான ஆலோசனைகள் :
உணவில் ஜீரண சக்தியை தூண்டும் புதினா, கொத்தமல்லி சேர்க்க வேண்டும்
இஞ்சியை தேனில் கலந்து ஊற வைத்து சாப்பிட்டால் ஜீரணம் சீரடையும் கல்லீரல் கோளாறுகள் சரியாகும். தினமும் உணவில் இஞ்சியை சேர்த்தால் செரிமானக் கோளாறுகள் வாரது.
கடிகார நேரப்படி சாப்பிடுவதை தவிர்த்து பசித்து புசிப்பது சிறந்தது.
சிறிதளவு உணவையும் 27 முறை மென்று கூழாக அரைத்து விழுங்குவது நல்லது.
அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் தேங்காய் எண்ணைப் பயன்படுத்தி கொண்டால் விரைவில் குணம் பெறலாம்.
துவர்ப்பு சுவையுள்ள வாழைப்பூ, நாவல்பழம் போன்றவை ஏதாவது ஒரு வடிவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இறைச்சியும், மதுவும், அல்சருக்கு கொண்டாட்டம் உடலுக்கு திண்டாட்டம்.
வறுத்த, பொரித்த உணவுகளும், இரவில் தோசையும் ஆகாது.
வெயில் காலங்களில் இளநீர், மோர், பதநீர், தாகத்தை தணிக்கும் ஜீரணத்தை தூண்டும்.
வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை குடித்து வெந்தயத்தை மென்று தின்ன வேண்டும்.
அல்சருக்கு செவ்வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், சப்போட்டபழம், மாதுளையும் நல்லது.
லெமன், அண்ணாச்சிப்பழம், பப்பாளி கூடவே கூடாது.
மலச்சிக்கலும், மனசிக்கலும் தீர்க்கப்படவில்லை என்றால் குடலின் உட்சுவர்கள் பாதிப்புக்குள்ளாகும்.
(இக்கட்டுரை மாற்று மருத்துவம் ஜூலை 2009 இதழில் வெளியானது)
லேபிள்கள்:
நூல் அறிமுகம்,
பயணம்,
மருத்துவகட்டுரைகள்,
முகப்பு
திங்கள், 9 டிசம்பர், 2013
சினைப்பை நீர்க்கட்டி ஹோமியோபதி மருத்துவம்
குழந்தை பெண்ணாய் பிறக்கும்போதே அதன் சின்னப்பைகளில் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை சினைமுட்டைகள் இருக்கிறது. குழந்தை வளர வளர இந்த எண்ணிக்கை குறைந்து 35000 முதல் 45000 ஆக குறைந்து விடுகிறது. மற்றவை சிதைந்து விடுகிறது. இருந்த போதிலும் ஒரு பெண்ணின் வாழ்நாளில் அவளது சினைப்பையில் 450லிருந்து 500 வரையிலான சினை முட்டைதான் முதிர்ச்சி அடைகிறது.
சினைப்பை அடிவயிற்றில் கர்ப்பப்பையின் இருபுறமும் ஒவ்வொன்றும் இருக்கும். ஒவ்வொரு சினைப்பையும் திராட்சை பழ அளவில் இருக்கும். இச்சினைப்பைகளில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் அவள் வாழ்வில் உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு பொறுப்பேற்கிறது.
சிறுமியாக இருந்து குமரி பருவத்தை எட்டும் காலத்தில் சுமார் 12 வயதிலிருந்து 15 வயதிற்குள் உடளவில் மாற்றம் ஏற்படத்துவங்குகிறது. மார்பகம் வெளிப்படையாக பெரிதாக வளரத் துவங்குதல். அக்குள் பாகங்களில், பிறப்புறுப்பு பாகங்களில் முடி முளைக்கத் துவங்குதல் போன்ற செயல்கள் நடைபெறுகிறது. இச்செயல்களுக்கு மூல காரணமாக இருப்பவை சினைப்பையில் உற்பத்தியாகும் பெண்களுக்கே உரிய முக்கியமான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டொரோன் எனும் இரு ஹார்மோன் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால்தான் பெண் பருவமடைகிறாள். பருவமடைந்த பின்பு மாதவிடாய் முற்று பெரும் வரை ஒவ்வொரு மாதமும் இந்த ஹார்மோன் உத்தரவுப்படிதான் கருத்தரிப்பதற்கான வாய்ப்பிற்கு தயார் ஆகிறாள்.
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செயல்பாடு.
சினைமுட்டையை வெளியிடுவதற்கும், பெண் உடலில் தேவையற்ற முடி வளருவதை (முகத்தில் மீசை, தாடி) தடுக்கவும் குரலில் மாற்றமடைந்து ஆண் குரல் போல் ஆகாமல் இருக்கவும், மாதவிடாய் மாதமாதம் முறையாக வெளியாவதற்கும், விடாய் வெளியான 5வது நாளிலிருந்து 14ஆம் நாள் வரை இச் சுரப்பு அதிகமிருக்கும். சினைப்பையில் கருமுட்டை வளர ஆரம்பிக்கும். 14வது நாள் சினைமுட்டை சினைப்பையிலிருந்து வெளியேறி சினைக்குழாய் வழியே ஆண் மகனின் உயிரணுவை எதிர்பார்த்து தனது பயணத்தை துவங்கும் இந்நாளில் தம்பதியர் இணைவது கர்ப்பதரிப்புக்கு சாத்தியமாகும்.
ப்ரோஜெஸ்ட்ரோன்
விடாய் வெளியான 14வது நாள் முதல் விடாய் வெளியாகும் நாள் வரை அதிகமாக இருக்கும். எதற்காக என்றால் கர்ப்பப்பையின் உள்ளே உள்ள ஜவ்வு அதிகமானதாக தென்படும். ஒரு வேளை தம்பதியர் ஒன்று கூடி கருத்தரிப்பு ஏற்படும் போது கருவை கர்ப்பப்பை தாங்கிக் கொள்ள ஏதுவாக மெத்தை போல் உட்புறச்சுவரை உருவாக்கவும், கருவாகவில்லை என்றால் உட்புற சுவருக்கு இரத்த ஓட்டம் குறையும். ஹார்மோன் உற்பத்தியும் குறையும். கர்ப்பப்பை உட்புற சுவரில் வந்து உட்கார்ந்த சினைமுட்டை ஆணின் உயிரணு தன்னை வந்து சேராததால் ஏமாற்றம் அடைந்து முதிர்ந்து கர்ப்பப்பை உட்வுற சுவர் சுருங்கி சதையும், இரத்தமுமாக சிலமாற்றங்கள் ஏற்பட்டு உதிர போக்காக வெளியாகும்.
சினைப்பை நீர்கட்டி அறிகுறிகள்
மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வருவது, மூன்று மாதம், இரண்டு மாதம் என தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் விடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன. இதை Polycystic ovary disorder (Pcod) என்பர். இதை ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறிந்து அக்குப் பஞ்சர் சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம். மேலும் சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல. அக்குப்பங்சர், ஹோமியோபதி சிகிச்சை, உடற்பயிற்சி, உடல் எடையை குறைப்பது போன்ற முறைகளை கடை பிடித்தால் கருத்தரிப்பதிலும் குழந்தை பிறப்பதிலும் பிரச்சனை வராமல் தடுக்கலாம். மாத விடாயை ஒழுங்குபடுத்தலாம். சினைப்பை நீர்க்கட்டி இருந்தால் உடல் பருமன் ஏற்படும். மாதவிடாய் ஒழுங்குபடுத்த கொடுக்கப்படும் ஹார்மோன் மாத்திரைகளாலும் உடல் பருமன் அதிகரிக்கும். சினைப்பையில் உற்பத்தியாகும் முக்கிய இரு ஹார்மோன்களின் திருவிளையாடல்களே சினைப்பை நீர்கட்டி உருவாக காரணமாகிறது. சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுசிறு கட்டிகள் தோன்றக்கக் கூடும்.
சினைப்பை நீர்க்கட்டிக்கான அக்குப்பஞ்சர் புள்ளிகள் : DU:20, UB:60, CV:3, St:29, SP:6, K.3 10
ஹோமியோ மருந்துகள் : அபிஸ் மெல், காலிப்புரோமேடம், தூஜா
உணவு வகை - பழக்கம்
இறைச்சி வகை தவிர்த்தல் நலம்
சுரைக்காய், தண்டுக்கீரை, உணவில் சேர்த்தல் நலம்
மாதுளம்பழம் சினைப்பை, கர்ப்பப்பை குறைபாடுகளை சீராக்க உதவும்.
மூலநோய்க்கு ஹோமியோபதி மருத்துவம்
உலகின் மக்கள் தொகையில் 500 நபர்களில் ஒருவருக்கு மூலம் தொந்தரவு உள்ளது. இருபது வயதிலிருந்து நாற்பது வயதுக்குட்பட்டோர்கள் ஓரளவு மெல்ல, மெல்ல மூலம் நோயாளியாக மாறி வருகிறார்கள். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மலச்சிக்கல் அதனுடன் தொடர்பு கொண்ட மூலம் நண்பனைப் போல் தொடர்பு கொண்டு அவ்வப்போது எதிரியைப் போல் இடையூறு செய்கிறது.
உடலில் உள்ள ஒவ் வொரு செல்களுக்கும் (cells) உணவாக ஆக்ஸிஜ னைக் கொண்டு செல்லும் பணி தமனியின் (Arteries) பணியாகும். இது தலை முதல் கால் வரை பரவி உள்ளது. இருதயத்திலிருந்து இரத்தம் தமனி வழியாக செல்லும் போது ஆக்ஸிஜனையும், உயிர் சத்துக்களை யும் எடுத்துச் செல்லும் பாதையில் குறிப்பிட்ட இடம் சென்று வேதியியல் மாற்றம் நிகழ்ந்து சிரைகள் (Venis) மூலமாக கரியமில வாயுவை எடுத்து வரும். தமனி - சிரை இவை இரண் டையும் இணைக்கும் சிறு இரத்த நாளங்களுக்கு தந்துகி (Capillaries) என்று பெயர்.
தமனியின் உட்சுவர் தடிமனாக உறுதியாக இருக்கும். ஏனென்றால் இருதயத்திலிருந்து இரத்தம் வெகு அழுத்தமாக வெளியேறும்போது இரத்தத்தை தாங்கும் பொருட்டு இயற்கையாகவே இவ்வாறு அமைந்துள்ளது.
சிரையின் உட்புறச் சுவர் மென்மையானது. உறுதியற்றது. உடல் முழுவதும் சிரைகள் உள்ளது. சில நேரங்களில் சிரை நாளங்களில் இரத்தம் அதிகளவில் அழுத்தமாக வரும்போது இரத்தம் நகராமல் தேங்கி நிற்கும் போது சிரைநாளங்கள் தளர்ந்து விரிவடைவதால் அசுத்த இரத்த குழாய் புடைத்தல் ஏற்படுகிறது. (Varicosevin) மலக்குடல் பகுதியில் உள்ள சுருக்கு தசையின் உட்பக்கம் இருக்கக் கூடிய சிரைகள் புடைத்து வீங்குவதால் மலக்குடலில் மூலம் உருவாகிறது. இது உள்மூலம் எனப்படுகிறது. ஆசனவாய் பகுதியில் சிரைகள் புடைத்து வீங்கும் போது வெளிமூலம் உருவாகிறது. மனிதர்களுக்கு இம்மாதிரியான இரண்டு விதமான மூல நோய்களும் ஏற்படுகிறது.
காரணம் :-
சிரைகள் அதிகமுள்ள இடங்களில் சிரைகள் மீது அழுத்தம் ஏற்படுவதாலும், மலசிக்கல், அதிக உடல் எடை அல்லது உடல் பருமன், கர்ப்பகாலம், ஆகிய மூன்று நிலைகளிலும் ஆசனவாய் பகுதியிலுள்ள சிரைகள் மீது அதிக அழுத்தம் ஏற்படுவதாலும், மலம் கழிக்கும் உணர்ச்சி ஏற்படும் போது மலத்தை வெளியேற்றாமல் அடக்கி வைக்கும் போது சிரைகள் மீது அழுத்தம் அதிகரிப்பதாலும், கோடைகாலங்களில் உடலில் தேவைக் கேற்ப தண்ணீர் அருந்தாமையாலும்,அதிக வியர்வையால் மலக்குடல், பெருங்குடல் பகுதியில் ஏற்படும் வறட்சியால் மலச்சிக்கல் ஏற்படுவதாலும்,முக்கியமாக நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களையும், கீரை வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளாமையாலும் அடிக்கடி இறைச்சி விரும்பி அதிகளவு உண்பதாலும், எல்லா வகையான உணவு உட்கொள்ளும் போதெல்லாம் ஊறுகாயை ருசித்து உண்பதாலும்,
கர்ப்பகாலத்தில் 6, 7வது மாதத்தில் கர்ப்பப்பை விரிவடையும் போது மலக்குடல் அழுத்தப்படுவதால், அப்போது மலச்சிக்கல் தோன்றி சிரை நாளங்கள் புடைப்பதாலும், சிலரின் வாழ்க்கைச் சூழல், வேலைத் தன்மைகள் காரணமாக ஓய்வு பெறும்வரை உட்கார்ந்தே பணிபுரிபவர்கள், ஓட்டுனர்கள், அடிக்கடி நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள், அதிக எடைகளை தனது சக்திக்கு மீறி தூக்குபவர்களுக்கு, சிரைகளில் அழுத்தம் உண்டாகி வீக்கம் ஏற்பட்டு மூலம் உருவாகிறது. இது மட்டுமல்லாமல் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, நாட்பட்ட தீராத இருமல் இதர வேறுசில நோய்களுடன் அஜீரணத்துடன் மலச்சிக்கலும் தோன்றுவதால் மூலம் நோய் உருவாகிறது. உடலுழைப்பு உடற்பயிற்சி இல்லாத மனிதர்கள் மூல நோயிலிருந்து தப்புவது சிரமம்.
உள்மூலம் :
ஆரம்ப நிலையில் மலம் கழிக்கும் போது லேசான வலியுடன் இறுக்கமான உணர்வு இருக்கும். மலக்குடலில் சிறிய உருண்டையாக வளர்ச்சி பெறும்போது முக்கி மலம் கழிக்கும் போது உருண்டை சதையானது மலக்குடலிருந்து வெளியே வரும்போது ஆசன வாயில் வலி அதிகமாகும். இதனால் ஆசன வாயிலிருந்து இரத்தம் வரும். ஆசனவாய்க்கு வெளிப்புறமாக வந்த உருண்டை சதையை விரல்களின் உதவியால் உள்ளே தள்ளிவிட வேண்டியதிருக்கும். உள்மூலம் முற்றிய நிலையில் ஆசனவாயின் உட்புறம் வீங்கியிருந்த வீக்கம் பெரியதாகி விட்டால் மலம் கழிக்கும்போது தாங்க முடியாத வலியும், இரத்தப் போக்கும் ஏற்படும். மூல வீக்கம் ஆசனவாய்க்கு வெளியே முழுமையாக வந்துவிட்டால் விரலை வைத்து உள்ளே தள்ளமுடியாது. இதில் ஒருவிதமான ஈரமான சவ்வுப்படலம் மூலக் கட்டியை மூடியிருக்கும். இந்நிலையில் ஆசன வாயில் புண் போன்ற வலியும், இரத்தக் கசிவும், ஈரப்பதமும் இருக்கும்.
வெளிமூலம் :
ஆரம்ப நிலையில் ஆசனவாய் துவாரத்தை சுற்றி பரவி இருக்கும் சிரைநாளங்களில் ஃ ஆயுத எழுத்து போன்ற மிளகு போன்ற வடிவத்தில் மூன்று சிறிய வீக்கமிருக்கும். இதனால் மலம் கழிக்கும் போது வலி இருக்கும். 2வது நிலையின் போது மிளகு வடிவில் இருந்த மூன்று வீக்கமும் வெளிப்பார்வைக்கு தெரியும்படி சற்று பெரிய வீக்கமாக காணப்படும் போது வலியும் வேதனையும் முன்பு இருந்ததை விட அதிகரிக்கும். மலம் கழிக்கும் போது மேலும் கடுமையாகும். மலம் கழிக்கும் நேரத்தில் வேதனையால் அலறுவார். மலங்கழிக்க வேண்டுமென்ற நினைப்பு வந்தாலே பயப்படுவார். வீக்கத்திலிருந்து ஒருவித நிறமற்ற திரவக்கசிவு ஏற்பட்டு ஆசனவாயில் நமைச்சல் ஏற்படும். இந்நிலையில் நோயாளி உட்காரவும், நிற்கவும் முடியாமல் சிரமப்படவேண்டியதிருக்கும். மேலும் வலியுடன் கூடிய ஒரு பந்தின் மீது உட்கார்ந்துள்ள உணர்வு ஏற்படும். ஆசனவாய்ப் பகுதியில் வெடிப்பும், இறுக்கமும் ஏற்படும்.
சிகிச்சைகள் :
ஆங்கில மருத்துவ முறையில் பொறுத்த வரையில் கிருமி கொல்லி மாத்திரைகளும், வீக்கத்தைக் குறைப்பதற்கான மாத்திரைகளும் மலச்சிக்கலை போக்கி வயிற்றுப்போக்கு ஏற்படுத்துகிற மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. இதன்பின்பும் பிரச்சனை தீரவில்லையெனில் அறுவை சிகிச்சை செய்து தற்காலிக நிவாரணம் வழங்கப்படுகின்றன.
ஹோமியோபதி மருத்துவமுறை மட்டுமே நோயாளியின் மன உணர்வுகள், உடல்வாகு, காரணம், பணியின்தன்மை,உணவுப் பழக்கம், நோயின் தீவிரத் தன்மையை பொறுத்தும், நோயறி குறிகளை மனதில் கொண்டும் சிகிச்சையளிக்கப்படுவதால் உடனடி நிவாரணமும் விரைவில் முழுநலமும் பெறலாம்.
மூல நோயாளிக்கு பயன்படும் ஹோமியோ மருந்துகள் சில ...
ஆலா - உள்மூலம், இரத்தம் கொட்டும் ஆசன வாயிலிருந்து திராட்சை குலைபோல் வெளியே வரும். அதிகவலி, அரிப்பு,எரிச்சல் இருக்கும் குளிர்ந்த நீரினால் துயர்தணியும். இரவில் தூக்கம் கெடும் காற்று பிரியும்போது மலம் வெளியேறும்.
மூரியாடிக் ஆசிட் - ஆசனவாயிலிருந்து திராட்சை கொத்து போன்ற மூலம் தொடமுடியாதபடி கடுமையான வலி,எரிச்சல், ஆசனவசாய் அரிப்பு குளிர்ந்த நீரினால் அதிகரிக்கும், வெந்நீரினால் தணியும் சிறுநீர் பிரியும்போது உணர்வின்றி மலமும் பிரியும்.
காலி.கார்ப் - இரத்தப்போக்குடன் உள்ள உள் மூலம், பெரியளவில் வீங்கி இருக்கும் எரிச்சல் தொடமுடியாதபடி வலி கத்தியால் குத்துவது போன்ற வலி, நெருப்பு போல் எரிச்சல், குளிர்ந்த நீரில் உட்கார்ந்தால் தணியும். மலம் கழிக்கும் முன் ஒருமணி நேரத்திற்கு முன்பு ஆசனவாயில் குச்சியால் குத்துவது போன்ற வலி.
நக்ஸ்வாமிகா - இரத்தமூலம், இரத்தமில்லாத மூலம் இரண்டுக்கும் பயன்தரும். வயிறுவலியுடன் அடிக்கடி மலம் கழிக்க தூண்டும் உணர்ச்சி, போய் உட்கார்ந்தால் சிறிதளவு மலம் மட்டும் வெளியாகும்.
சல்பர் - வலியில்லாத மூலம்
ஹமாமெலிஸ் - இரத்த மூலம் மலம் கழிக்கும்போது ஏராளமாக இரத்தம் வரும் மூலத்தில் எப்போதும் புண் போன்ற வலி, இரத்தம் அடர்த்தியாக கரு நிறத்தில் இருக்கும்.
அம்-கார்ப் - மலம் கழித்த பின் ஏற்படும் இரத்தப் பெருக்கு.
கோலின்சோனியா - உள்ளே இருந்து வெளியே தள்ளும் மூலம். மணலும், குச்சிகளும் மலக் குடலில் நிரம்பியுள்ள உணர்ச்சி, அதிகளவு இரத்தப்போக்கு இல்லாவிட்டாலும் விட்டு, விட்டு இரத்தப்போக்கு ஏற்படும். மிகக்கடுமையான மலச் சிக்கல். குறிப்பாக கர்ப்பகால மலச்சிக்கல், வறண்டமலம், ஆசனவாய் அரிப்பு, வயிற்று போக்கும் மலச்சிக்கலும் குறிப்பாக வயதானவர்களுக்கு மாறிமாறி வரும்.
எஸ்குலஸ் - மிக நாட்பட்ட மூலம். கோலின்சோனியா குணமாக்கி விட்டபின்பு இது உதவும்.
ப்ரோமியம் - இரத்தம் இல்லாத மூலம், மலம் கழிக்கும் போதும், பின்பும் கடும் வலி, அந்த இடத்தில் நோயாளியின் உமிழ்நீரை தடவினால் வலி குறையும்.
ரட்டானியா - மூலம் உள்ளிருந்து பிதுங்கி வரும்போது வலி, எரிச்சல் கடுமையாக நீடிக்கும். பல மணிநேரம் இருக்கும். மலக்குடலில் கண்ணாடி துண்டுகளில் உட்கார்ந்த உணர்வு, குளிர்ந்த நீரை பயன்படுத்தினால் துயர் தணியும்.
நைட்ரிக் ஆசிட் - மிருதுவான மலத்தைக் கூட வெளியேற்றுவதற்கு முன்பும், பின்பும் நீண்டநேரம் கடும்வலி, எரிச்சல்,அதிக இரத்தப்போக்கு, ஒவ்வொருமுறை மலங்கழித்த பின்பும் பலவீனமாக உணர்தல், மூலம் வெளியேறும் சமயத்தில் ஆசனவாயில் வெடிப்புக்கள் ஏற்படுதல்.
புளோரிக் ஆசிட் - வெளிமூலத்திற்கு முக்கிய மருந்து. வேறுசில தீவிர மருந்துக் குறிகள் இருந்து குணமான பின் வீக்கம் மட்டும் இருத்தல்.
இக்னேஷியா - குத்தும் வலியுள்ள மூலம், மலம் கழித்தபின் வெளியே பிதுங்கிய சதையை உள்ளே தள்ள வேண்டிய நிலை. உட்கார்ந்தால், இருமினால் வலி அதிகரிக்கும்.
சிலிகா - ஈரக்கசிவும், அதிக வலியும் உள்ள மூலம். கடின மலம் வெளியே வந்து சிறிது மலம் மீண்டும் உள்ளே சென்றுவிடும். மலம் கழித்து வெகுநேரம் வலி இருக்கும்.
மூல நோயாளிகளுக்கு இயற்கை மருத்துவ ஆலோசனைகள் :
இரத்தமூலத்திற்கு பசும்பால் கறந்தவுடன் மேலிருக்கும் நுரையை எடுத்து எலுமிச்சை சாறு கலந்து காலை, மாலை இருவேளை பருகினால் 3லிருந்து 7 நாட்களுக்குள் இரத்தப் போக்கு நிற்கும்.
நீண்ட நாள் இரத்த மூலத்திற்கு தயிரில் வெங்காயத்தை ஊறவைத்து தினம் இருவேளை சாப்பிட்டால் நல்லது.
எல்லா வகையான மூலத்திற்கும் தொட்டால் சிணுங்கி, செடி, இலை, தண்டு, வேர் இவைகளை கசாயமாக செய்து அருந்தலாம். வலி, வீக்கம் குறையும்.
எல்லா வகையான மூலத்திற்கும் கிரந்தநாயகம் இலையை பருப்புடன் சேர்த்து கூட்டுசெய்து சாப்பிட்டால் வலி, வீக்கம் இரத்தப்போக்கு தணியும்.
வெங்காய சாறுடன் நெய் அல்லது நாட்டுசர்க்கரை கலந்து பருகினால் விரைவில் குணம் பெறலாம்.
கொதிக்கும் நீரில் மாதுளம்பழ விதை சிலவற்றை போட்டு சிறிது நேரத்தில் இறக்கி தேநீர் போல் அருந்திவர விரைவில் குணம் பெறலாம்.
மூலம் வலி நீங்க சிறிதளவு பாலில் வாழைப்பழம் சேர்த்து கடைந்து ஜாம் போல் செய்து சாப்பிட்டு வர வலி நீங்கும்.
பாகற்காய் இலையை சாறெடுத்து மோருடன் கலந்து காலை, மாலை, பருகிவர நல்ல பலன் கிடைக்கும்.
வலியுள்ள இடத்தில் முருங்கை இலையை அரைத்து பூசலாம்.
மாங்கொட்டையிலிருக்கும் விதையை பவுடராக்கி இரண்டு ஸ்பூன் வீதம் தினம் இருவேளைதேன் கலந்து சாப்பிடலாம்
- Dr. க. வெள்ளைச்சாமி, RHMP, RSMP
விருதுநகர். Cell : 98947 48449
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
.jpg)



.jpg)