இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 டிசம்பர், 2013

சினைப்பை நீர்க்கட்டி ஹோமியோபதி மருத்துவம்

குழந்தை பெண்ணாய் பிறக்கும்போதே அதன் சின்னப்பைகளில் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை சினைமுட்டைகள் இருக்கிறது. குழந்தை வளர வளர இந்த எண்ணிக்கை குறைந்து 35000 முதல் 45000 ஆக குறைந்து விடுகிறது. மற்றவை சிதைந்து விடுகிறது. இருந்த போதிலும் ஒரு பெண்ணின் வாழ்நாளில் அவளது சினைப்பையில் 450லிருந்து 500 வரையிலான சினை முட்டைதான் முதிர்ச்சி அடைகிறது.
 சினைப்பை அடிவயிற்றில் கர்ப்பப்பையின் இருபுறமும் ஒவ்வொன்றும் இருக்கும். ஒவ்வொரு சினைப்பையும் திராட்சை பழ அளவில் இருக்கும். இச்சினைப்பைகளில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் அவள் வாழ்வில் உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு பொறுப்பேற்கிறது.
 சிறுமியாக இருந்து குமரி பருவத்தை எட்டும் காலத்தில் சுமார் 12 வயதிலிருந்து 15 வயதிற்குள் உடளவில் மாற்றம் ஏற்படத்துவங்குகிறது. மார்பகம் வெளிப்படையாக பெரிதாக வளரத் துவங்குதல். அக்குள் பாகங்களில், பிறப்புறுப்பு பாகங்களில் முடி முளைக்கத் துவங்குதல் போன்ற செயல்கள் நடைபெறுகிறது. இச்செயல்களுக்கு மூல காரணமாக இருப்பவை சினைப்பையில் உற்பத்தியாகும் பெண்களுக்கே உரிய முக்கியமான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டொரோன் எனும் இரு ஹார்மோன் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால்தான் பெண் பருவமடைகிறாள். பருவமடைந்த பின்பு மாதவிடாய் முற்று பெரும் வரை ஒவ்வொரு மாதமும் இந்த ஹார்மோன் உத்தரவுப்படிதான் கருத்தரிப்பதற்கான வாய்ப்பிற்கு தயார் ஆகிறாள்.
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செயல்பாடு.
 சினைமுட்டையை வெளியிடுவதற்கும், பெண் உடலில் தேவையற்ற முடி வளருவதை (முகத்தில் மீசை, தாடி) தடுக்கவும் குரலில் மாற்றமடைந்து ஆண் குரல் போல் ஆகாமல் இருக்கவும், மாதவிடாய் மாதமாதம் முறையாக வெளியாவதற்கும், விடாய் வெளியான 5வது நாளிலிருந்து 14ஆம் நாள் வரை இச் சுரப்பு அதிகமிருக்கும். சினைப்பையில் கருமுட்டை வளர ஆரம்பிக்கும். 14வது நாள் சினைமுட்டை சினைப்பையிலிருந்து வெளியேறி சினைக்குழாய் வழியே ஆண் மகனின் உயிரணுவை எதிர்பார்த்து தனது பயணத்தை துவங்கும் இந்நாளில் தம்பதியர் இணைவது கர்ப்பதரிப்புக்கு சாத்தியமாகும்.
ப்ரோஜெஸ்ட்ரோன்
 விடாய் வெளியான 14வது நாள் முதல் விடாய் வெளியாகும் நாள் வரை அதிகமாக இருக்கும். எதற்காக என்றால் கர்ப்பப்பையின் உள்ளே உள்ள ஜவ்வு அதிகமானதாக தென்படும். ஒரு வேளை தம்பதியர் ஒன்று கூடி கருத்தரிப்பு ஏற்படும் போது கருவை கர்ப்பப்பை தாங்கிக் கொள்ள ஏதுவாக மெத்தை போல் உட்புறச்சுவரை உருவாக்கவும், கருவாகவில்லை என்றால் உட்புற சுவருக்கு இரத்த ஓட்டம் குறையும். ஹார்மோன் உற்பத்தியும் குறையும். கர்ப்பப்பை உட்புற சுவரில் வந்து உட்கார்ந்த சினைமுட்டை ஆணின் உயிரணு தன்னை வந்து சேராததால் ஏமாற்றம் அடைந்து முதிர்ந்து கர்ப்பப்பை உட்வுற சுவர் சுருங்கி சதையும், இரத்தமுமாக சிலமாற்றங்கள் ஏற்பட்டு உதிர போக்காக வெளியாகும்.
சினைப்பை நீர்கட்டி அறிகுறிகள்
 மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வருவது, மூன்று மாதம், இரண்டு மாதம் என தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் விடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன. இதை Polycystic ovary disorder (Pcod) என்பர். இதை ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறிந்து அக்குப் பஞ்சர் சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம். மேலும் சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல. அக்குப்பங்சர், ஹோமியோபதி சிகிச்சை, உடற்பயிற்சி, உடல் எடையை குறைப்பது போன்ற முறைகளை கடை பிடித்தால் கருத்தரிப்பதிலும் குழந்தை பிறப்பதிலும் பிரச்சனை வராமல் தடுக்கலாம். மாத விடாயை ஒழுங்குபடுத்தலாம். சினைப்பை நீர்க்கட்டி இருந்தால் உடல் பருமன் ஏற்படும். மாதவிடாய் ஒழுங்குபடுத்த கொடுக்கப்படும் ஹார்மோன் மாத்திரைகளாலும் உடல் பருமன் அதிகரிக்கும். சினைப்பையில் உற்பத்தியாகும் முக்கிய இரு ஹார்மோன்களின் திருவிளையாடல்களே சினைப்பை நீர்கட்டி உருவாக காரணமாகிறது. சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுசிறு கட்டிகள் தோன்றக்கக் கூடும்.
சினைப்பை நீர்க்கட்டிக்கான அக்குப்பஞ்சர் புள்ளிகள் : DU:20, UB:60, CV:3, St:29, SP:6, K.3 10
ஹோமியோ மருந்துகள் : அபிஸ் மெல், காலிப்புரோமேடம், தூஜா
உணவு வகை - பழக்கம்
 இறைச்சி வகை தவிர்த்தல் நலம்
 சுரைக்காய், தண்டுக்கீரை, உணவில் சேர்த்தல் நலம்
 மாதுளம்பழம் சினைப்பை, கர்ப்பப்பை குறைபாடுகளை சீராக்க உதவும்.

மலர்மருத்துவம் [பழக்க வழக்க அடிமை நீங்க... ]


புறச்சூழல் செல்வாக்கினால் மனபாதிப்படையும் மனிதர்களுக்கு Dr.எட்வர்டு பாட்ச் அக்ரிமோனி, சென்டாரி, வால்நாட்,ஹால்லி ஆகிய நான்கு மருந்துகளை சிபாரிசு செய்கிறார். இப்போது நாம் வால்நாட் (Walnut) மலர்மருந்து புறச்சூழல் செல்வாக்கில் பாதிப்புக்குள்ளாகும் எம்மாதிரியான மனநிலையை சீராக்குகிறது என்பதை அறிவோம்.
 சூழ்நிலை மாற்றத்தை ஏற்க இயலாத மனநிலை.
 பழகிய விசயங்கள், பழகிய மனிதர்களை, பழகிய இடங்களைவிட்டுப் பிரிய முடியாத தவிப்பு.
 சூழ்நிலை மாற்றங்களைப் போலவே உடலில் ஏற்படும் பருவ வளர்ச்சி மாற்றங்களால் பாதிப்படைதல்.
 தீய பழக்கங்களுக்கு அடிமையாதல் மூடப்பழக்க வழக்கங்கள் குருட்டு நம்பிக்கைகளில் மூழ்கி கிடத்தல்.
பல ஆண்டுகள் ஒரு தெருவில் குறிப்பிட்ட வீட்டில் குடியிருந்து விட்டு அடுத்த ஊருக்கு மாற்றுதலாகி வீட்டை காலி செய்து விட்டு போகும்போது அக்கம் பக்கத்தில் குடியிருப்போர்களை விட்டு, பழகிய நபர்களை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உள்ளதே என்று மனங்கலங்குபவர்கள்.
புதிய வீட்டில் புதியதொரு சூழலில் அங்குள்ள நிலைமையை ஏற்றுக் கொள்ளாத மனநிலை ஏற்படும்போதும் வழக்கமாக தூங்கிய இடத்தை விட்டுவிட்டு புதிய இடத்தில் படுத்திருப்பதால் தூக்கமின்றி தவிப்போர்கள், ஒரு சில நாட்களுக்கு மலச்சிக்கல் ஏற்படலாம். புதிய நீர் ஒத்துக்கொள்ளாமல் தொண்டை அலர்ஜி போன்ற உடல் உபாதைகள் தோன்றும் போது வால்நாட் சில உருண்டைகளை சில வேளைகள் சுவைத்து சாப்பிடும்போது புதிய சூழ்நிலையோடு ஒத்துப்போகும் மனநிலை உருவாகும். பெண்ணை திருமணம் செய்து கொடுத்து புகுந்த வீடு அனுப்பும் போது பெற்றோர்,உடன்பிறந்தோர்களுக்கு ஏற்படும் மனதவிப்புக்கும், பெற்றோர், உற்றோரையும் பிரிந்து செல்கிறோமே என்று புதுமணப் பெண்ணுக்கு ஏற்படும் தாங்க முடியாத பிரிவின் தவிப்பிற்கு வால்நட் வரப்பிரசாதம்.
பழகிய பழைய காதலை, காதலியை மறக்க முடியாமல் நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா. பழகத் தெரிய உயிரே உனக்கு விலக தெரியாதா? என்ற பாடலுக்கு பொருத்தமான மனநிலையை சீர் செய்ய வால்நாட் உதவும்.
சிலருக்கு வாழ்க்கை சூழல் அலுவலக பணியின் தன்மை காரணமாக வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும் போது தங்குமிடம், அங்குள்ள உணவு முறைகள், தண்ணீர் போன்றவை ஒத்துக்கொள்ளாமல் உடல் ரீதியாக ஏற்படும் கோளாறுகளுக்கு வால்நட் பயன்படும்.
புதிதாக திருமணமாகி புகுந்த வீடு செல்லும் மணப்பெண்களுக்கு அங்குள்ள சூழ்நிலையோடு ஒத்துப் போகவும்,மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை எளிதில் புரிந்து கொண்டு புதிய குடும்பச் சூழ்நிலையோடு சகஜமாக கூச்சமின்றி பழகி ஒன்றினைய வால்நட் உதவும். எனவே புதுமணப் பெண்ணுக்கு சீர்வரிசைகளுடன் வால்நட் கொடுத்தனுப்புவது நல்லது.
சூழ்நிலை மாற்றங்களைப் ஏற்காத மனநிலையைப் போலவே உடலின் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்தில் ஏற்படும் மாற்றத்தின் போதும் வால்நட் உதவும். பிறந்த குழந்தை குப்புறப் புரண்டு படுக்கும்போதும், தவழ்ந்து, எழுந்து நிற்க,நடக்க, முயற்சிக்கிறபோது, பல்முளைக்கும் போதும், பள்ளி செல்லும் வயதில் தினம்தோறும் விரும்பி பள்ளி செல்ல தயார் ஆகவும், பெண்பிள்ளைகள் குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்திற்கு மாறுகிறபோது, உடலளவில்,மனதளவில் ஏற்படும் மாற்றங்களை சரி செய்திடும் அற்புத மலர் மருந்து வால்நட்.
குமரியாக இருந்தவள் மனைவியாக, குடும்பத் தலைவியாக, கர்ப்பிணியாக தாய்மையடைந்து, குழந்தைக்கு பாலூட்டும் போதும் மாதவிடாய் நிற்கும்காலத்தில் உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உதவும் வால்நட். ஆண்களுக்கும் வாலிபப் பருவத்திலும், திருமணமானபின்பு குடும்பத் தலைவராக பொறுப்பேற்று குடும்பத்தை வழிநடத்துகிறபோதும் புதிய, புதிய சூழ்நிலைகளை சிந்தனை தெளிவுடன் சமாளித்திட வால்நட் பயன்படும்.
தவறான தீய பழக்க வழக்கங்களை மாற்றியமைத்திடவும் நெடுநாள் பழகிய விசயங்கள் தவறானது என்று தெரிந்தும் விடமுடியாமல் தவிப்போர்கள், திருமணமானபின்பும் பல பெண்களுடன் பாலியல் தொடர்புகளை துண்டித்து கொள்ளாமலிருப்பவர்கள் மற்றும் சுயஇன்ப பழக்கத்திலிருந்து விடுபட இயலாமையால் மனம் வாடுவோர்க்கும் கைசூம்பும் பழக்கமுள்ள குழந்தைகள், தாய்பாலை மறக்காமல் உள்ள குழந்தைகள், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கமுள்ள குழந்தைகள், மது பழக்கம், புகை பழக்கம் மற்றும் இதர  போதைப் பழக்கங்களை கைவிட முடியாமல் தவிப்போர்களுக்கு வால்நட் நல்வழி காட்டும்.