செவ்வாய், 31 டிசம்பர், 2013

குற்ற உணர்வை குணமாக்கிய மலர் மருந்து.

               இரண்டு வயதுக்குழந்தையின் தாயான  26 வயது நிரம்பிய சுசிலா        ஜந்தரை அடி உயரமிருப்பாள்  சிவந்தமேனி,பொழிவிழந்த  முகம் நிம்மதியாக  தூங்கி பல நாள் ஆனதை  காட்டி கொடுக்கும் கண்கள், வறண்ட  உதடுகளூடன்  மாடி வீட்டு ஏழை போல் காணப்பட்டார்  
                                                                                                                                                                   ,,சமிபகாலமாய் தனிமையில் இருக்கும் போதெல்லாம்     நீ குற்றவாளி , நீ  தவறு செய்து விட்டாய் உனக்கு மோட்சமே கிடைக்காது.என்றுஉள் மனது என்னை குற்றம் சாட்டிக்கொண்டே  இருக்கிறது.  தினசரி  நாளிதழ் களில் வெளிவரும் கொலை செய்திகள்  கூட   நான் சொல்லித்தான்  கொலைகள்  நடந்து செய்தி வெளியாகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது.                                                                                                                                                                      
          இதனால் மனநிம்மதி போய்விட்டது.எனது குழந்தையை சரியாக கவனிக்கமுடியவில்லை.எனது ஆசிரியபனியையும்  சரிவர செய்யமுடியவில்லை, மற்ற ஆசிரியர்களூடனும்  கனவருடனும் மகிழ்ச்சியாகவும்  மனம் விட்டு பழக , பேச முடியவில்லை.                                                                                                                                                                                                    பள்ளியில் மாணவர்கள் தவ்று செய்தாலோ நீ தான் பொறுப்பு ,நீ ஆசிரியப்பனிக்கு பொறுத்தமில்லதவள் என்கிறது என் உள்மனது.                                                                                                                                                                                                                 சுசிலாவுக்கு பாட்ஜ்  மலர்மருத்துவத்தில்          pine                எனும் மருந்து  15 நாள் கொடுத்ததில்  அருமையான  முன்னேற்றம்.                                                                                                                                                                                                                               ஒரு மாத சிகிச்சையில்  நன்கு குனமடைந்தார் மன நல பிரச்சனைகளூக்கு  மலர் மருத்துவம் மிகசிறந்தது.உலக சுகாதார நிறுவனம் அங்கிரித்த  உன்னத மான் சிகிச்சைமுறை.

வெள்ளி, 13 டிசம்பர், 2013

குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஆண் - பெண் பாகுபாடின்றி அனைவரும் செரிமானக் கோளாறுகளுக்கு ஆட்படாமல் தப்பித்து இருக்க முடியாது. நாம் உண்ணும் உணவிலுள்ள மாவுச்சத்துபுரதச்சத்துக்களை பிரித்து இரத்தத்தில் சேர்ப்பதற்காக இரைப்பையில் சுரக்கும் அமிலநீர் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் சுரப்பதால் இரைப்பையில் உள்ள உணவு செரிமானம் ஆகாமல் உணவுக்குழாய் வழியாக மேல் நோக்கி எதுக்களித்து வருவதால் நெஞ்சுஎரிச்சல்புளித்தஏப்பம் ஏற்படுகிறது.

காரணம் :
உணவில் மசாலா மற்றும் காரமானநறுமணமுள்ள உணவுப் பொருட்கள் அதிகளவில் சேர்ப்பதாலும்மிளகாய்,ஊறுகாய்உணவின் சுவையை அதிகரிப்பதற்காக அதிகளவில் பயன்படுத்துவதாலும் இடைவிடாது புகைப்பதாலும்,அதிக கவலைமன அழுத்தம்மனஇறுக்கம் அதிக உணர்ச்சிவசப்படுவதாலும்அடிவயிறு அறுவை சிகிச்சையின் காரணமாக கிருமி தொற்று ஏற்படுவதாலும்ஆஸ்பிரின்கிருமி கொல்லி வலி நிவராணி மருந்து மாத்திரைகள் போன்றவைகளை நீண்ட காலம் உட் கொள்வதாலும்விருப்பமான உணவுகளை விருப்பமான நேரங்களிலெல்லாம் வயிறு புடைக்க சாப்பிடுவதாலும்மனிதன் உயிர்வாழ்வதற்காக உணவு சாப்பிடுவது என்பதற்கு பதிலாக உணவு சாப்பிடுவதற்காகவே உயிர் வாழ்வது என்ற கொள்கையில் உறுதியாய் உடையோர்கள் Fast food அதிகளவில் உண்போர்கள் வயிறு பசிக்காத நேரங்களில் கடிகார நேரப்படி உணவு விசயத்தில் தாரளமாய் நடந்து கொள்பவர்கள். பணம் செலவு செய்து தயார் செய்த உணவுகளை பயன்படுத்தியது போக மீதமுள்ள உணவுகளை கெட்டுப் போய்விட்டால் குப்பையில் கொட்ட வேண்டுமே என்று இரைப்பையை குப்பைத் தொட்டியாக ஆக்கி கொள்வதாலும்அஜீரணமும்இரைப்பை அழற்சியும்வாய்ப்புண்களும், an style="font-family:Latha;mso-bidi-language:TA" lang="TA">இரைப்பை, சிறுகுடல் புண்களும் ஏற்படும் இரத்தசோகை உள்ளவ ர்களுக்கு இயற்கையாகவே குடல்புண் வரும் வாய்ப்புக்கள் அதிகம்.
இரைப்பை அமிலநீர் சுரப்பின் ஆரம்ப அறிகுறிகள் (Primary Hyper Acidity):
உணவு உண்டவுடன் மேல் வயிற்று பகுதியில் மந்தமானதொரு நிலையான வலியேற்படுதல். அதிகளவு உணவு மற்றும் வேறு காரணங் களுக்காக உட்கொள்ளும் ஆங்கில மாத்திரை களாய் குமட்டலும்வாந்தியும் தோன்றுதல்,நன்றாக சாப்பிட்டு வரும் காலங்களில் இடையிடையே பசிமந்தம் அல்லது பசி இல்லாத நிலை">புளித்த ஏப்பம். நெஞ்சுஎரிச்சல்சிறிது சாப்பிட்டாலும் வயிறு நிறைதல் அல்லது சாப்பிட்ட அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் சாப்பிட தோன்றுதல் வயிறு உப்புசம்வாயு தொந்தரவுகள்இரைப்பையிலிருந்து இரத்த வாந்தி அல்லது மலத்தில் ரத்தம் வருதல் மிகை அமிலச்சுரப்பு நீடித்தால் இரத்த சோகை ஏற்பட்டு முற்றிய நிலையை நோக்கி முன்னேறும். இந்நோயை குணப்படுத்தாமல் அலட்சியமாகவும்கவனக்குறைவாகவும் விட்டு விட்டால் இரைப்பையில் புண் உண்டாகி இரைப்பையில் துளையை ஏற்படுத்தி விடும்.
Secondary Hyper Acidity:
இந்நோய் இரண்டாவது நிலையை அடையும் போது உண்ட உணவு உணவுக்குழாய் வழியாகபுளிப்புஎரிச்சலுடன் எதிர்த்து வருதல். இவ்வாறு எதிர்களித்து வருவதால் உணவுக் குழாயின் உட்புற தசைகள் சேதமடையும்.
அறிகுறிகள் :
நெஞ்சுஎரிச்சல் நடுமார்பின் அடிப்பகுதியில் பின்பகுதியில் ஏற்படும் எரிச்சல் வலி மேலேறிவரும் பெரும்பாலும் வலி உண்டபின் வரும் இரவுபடுத்தவுடன் வலி அவ்வப்போது தலைகாட்டுவதால் இரவுதூக்கத்தை கலைக்கும். மீண்டும் தூங்குவதற்கு சில மணி நேரங்கள் ஆகும். தூங்க முடியாமல் அவதிப்படுவார்தொடர்ந்து எதுக்களித்தல் இருப்பதால் தொண்டையில் புண் ஏற்படும். சிலருக்கு குனிந்தாலே எதிர்களிப்பு வாய்வரைவரும். தொடர்ந்து எதிர்களிப்பு இருப்பதால் தொண்டையில் சிறு பந்து அடைத்து கொண்டது போன்ற உணர்வு ஏற்படும். உடல் பருமன் உள்ளவர்களுக்கு நிறைய எதிர்களித்து வரும். இவர்களிடம் புகை பழக்க மிருந்தால் உடனே நிறுத்தி உண்ணும் உணவின் அளவை குறைக்க வேண்டும். சிறிது சாப்பிட் டாலும் எதிர்களிப்பு வரும் நபர்கள் மது,கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். முற்பகலிலும்மாலையிலும் கண்டிப்பாக சிற்றுணவு கூடாது. இது போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் குனிந்து செய்யும் வேலையை தவிர்க்க வேண்டும். தலையணையை சற்று உயரமாக 15 to 30 செ.மீ உயரமாக வைத்து படுக்கலாம்.
Dueodinal ulcer:
முன்சிறு குடலில் புண் இருந்தால் பசி நேரத்தில் வயிற்றில் வலியேற்படும். அப்போது ஏதாவது சாப்பிட்டால் வயிறு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். சாப்பிடாவிட்டால் முன் சிறுகுடலில் உற்பத்தியாகும் அமிலநீர் மேலேறி வந்து இரைப்பையை புண்ணாக்கும். எனவே இந்நோயாளிகள் பிஸ்கட்பழங்கள் கைவசம் எப்பொழுதும் வைத்திருப்பார்கள்.
இரைப்பைபுண் (Peptic ulcer) :
உண்ட உணவு இரைப்பையில் உள்ள புண்ணை தாக்கும் போது சாப்பிடமுடியாது. நாளுக்கு நாள் உடல் மெலியும்,ஆரம்பநிலையில் எரிச்சல் இருக்கும். புண்ணாகிப் போனால் வலி ஏற்படும். சில சமயங்களில் இரைப்பையின் மேல்பாகத்தில் புண் ஏற்பட்டு வலி தோன்றும் போது இருதய வலியாக இருக்குமோ என்றும் தனக்கு மாரடைப்பு தோன்றிவிடுமோ என்ற பயம் நோயாளிக்கு தோன்றும் இச்சந்தேகங்களுக்குரிய பரிசோதனைகள் மூலம் விடை காண முடியும்.
நவீன மருத்துவம் என்று தனக்குதானே பெயர் சூட்டி மகிழ்ந்து கொள்ளும் ஆங்கிலம் மருத்துவ முறை செரிமானக் கோளாறுகளுக்கு உடனடி நிவாரணம் என்ற பெயரில் அமில முறிவு மருந்துகளால் தற்காலிக நிவாரணம் மட்டுமே வழங்க முடியும்கூடவே பக்கவிளைவுகளாக அதிக உணர்ச்சி வசப்படும் தன்மைசின்ன விசயத்தையும் பெரிதாக்கும் அதிகப்படியான உணர்ச்சிகளை உடலளவிலும் மனதளவிலும் உருவாக்குவதோடு சில சமயங்களில் தற்கொலை எண்ணங்களும் தோன்றும். செரிமானக் கோளாறுகள்எதுக்களித் தல்நெஞ்செரிச்சல் போன்ற கோளாறுகள் துவக்க நிலையிலே தென்படும்போது புகைமதுநிறுத்திவிட்டுஅடிக்கடிமன அழுத்தம் ஏற்படாத வாறு பார்த்துக்கொண்டு தேவையற்ற ஆங்கிலம் மாத்திரைகளை தவிர்த்திட முயல வேண்டும்.
ஹோமியோபதி சிகிச்சை :
யோமியயோபதி மருத்துவ முறையில் நோய் வாய்ப்பட்டவரின் நோய்க்கான மூலக் காரணத்தை கண்டறிவதோடு. அச்சமயத்தில் நோயாளிக்கு ஏற்படும் மன உணர்ச்சிகளையும் கவனத்தில் கொண்டு முழுமனிதனையும் ஆய்வு செய்து மருந்து தேர்வு செய்யப்படுவதால் உடனடி நிவாரணமும் விரைவில் முழுநலமும் கிடைக்கும்.
1. ஆங்கில மாத்திரைகளால் வாயும்வயிறும் புண் ஏற்பட்டால் - போராக்ஸ்
2. அல்சர் வரும் உடல் வாகு உள்ளவர்களுக்கான மருந்து - யுரேனியம் நைட்.6.
3. அஜீரணம்பசியற்ற தன்மைகளுக்கு பொதுவான மருந்து அசைவ பிரியர்களுக்கும் ஏற்றது. - அல்லியம் சட்டிவம்30.
4. புகைப்பதால் ஏற்படும் நெஞ்சுஎரிச்சல் - செபியா 30.
5. இரைப்பை புண்வாய்ப்புண்வாய் துர்நாற்றம் - காலிகுளோரிகம் 30.
6. இரைப்பையிலிருந்து வாய்வரை எதுக்களித்து பற்களில் கூச்சத்தை ஏற்படுத்துதல் - ரொபினியா 30.
7. வயிறு உப்புசம் கடுமையான வலிஇரைப்பை வேக்காடு ஜீரணம் ஆகாத உணவுப்பொருட்கள் வாந்தியாதல் - லாக்டிப்ளரோட்டம்
8. பசியின் போது வயிற்றில் கடிக்கும் தன்மையுடன் வலி ஏற்பட்டால்- அனகார்டியம்
9. பசியில்லாமல் வயிற்றில் கடிக்கும் தன்மையுடன் வலி ஏற்பட்டால்- நக்ஸ்வாமிகா
10. இரைப்பை புண்களுக்கான இடை மருந்தாகவும்புண் பெரியதாகிய நிலையில் இருந்தால் - ஆந்திராசினம் 1
11. .இரைப்பையிர் எரிச்சலுடன் பிசையும் வலி. சாப்பிடும் போதுபின்பும் குமட்டல் வாந்தி வலி சிறிய இடத்தில் மட்டும் இருக்கும் - காலிபைக்ரோமிகம்
12. வயிறு வலியினால் இரவில் விழித்துக் கொள்ளுதல் பித்தமோஜீரணமாகாத உணவுப்பொருட்கள் வாந்தியாதல் குளிர்ந்த நீர் குடித்தால் வலி குறையும். - அர்ஜெண்டம்நைட்
13. உண்டபின் வயிற்றில் கனம்வலிஎரிச்சல்குளிர்ச்சியாக குடித்தால் ஒத்துக்கொள்வதில்லை - கல்கேரியா ஆர்ஸ்
14. உணவுக்குழாய் முழுவதும் எரிச்சல்வெந்நீரை ஊற்றி வெந்து போனது போலிருத்தல். இரைப்பையில் எரிச்சல்,புளிப்பானகசப்பான வாந்தி. - ஐரீஸ்வெர்சிகலர்
அல்சர் நீங்க அருமையான ஆலோசனைகள் :
 உணவில் ஜீரண சக்தியை தூண்டும் புதினாகொத்தமல்லி சேர்க்க வேண்டும்
 இஞ்சியை தேனில் கலந்து ஊற வைத்து சாப்பிட்டால் ஜீரணம் சீரடையும் கல்லீரல் கோளாறுகள் சரியாகும். தினமும் உணவில் இஞ்சியை சேர்த்தால் செரிமானக் கோளாறுகள் வாரது.
 கடிகார நேரப்படி சாப்பிடுவதை தவிர்த்து பசித்து புசிப்பது சிறந்தது.
 சிறிதளவு உணவையும் 27 முறை மென்று கூழாக அரைத்து விழுங்குவது நல்லது.
 அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் தேங்காய் எண்ணைப் பயன்படுத்தி கொண்டால் விரைவில் குணம் பெறலாம்.
 துவர்ப்பு சுவையுள்ள வாழைப்பூநாவல்பழம் போன்றவை ஏதாவது ஒரு வடிவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 இறைச்சியும்மதுவும்அல்சருக்கு கொண்டாட்டம் உடலுக்கு திண்டாட்டம்.
 வறுத்தபொரித்த உணவுகளும்இரவில் தோசையும் ஆகாது.
 வெயில் காலங்களில் இளநீர்மோர்பதநீர்தாகத்தை தணிக்கும் ஜீரணத்தை தூண்டும்.
 வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை குடித்து வெந்தயத்தை மென்று தின்ன வேண்டும்.
 அல்சருக்கு செவ்வாழைப்பழம்பச்சை வாழைப்பழம்சப்போட்டபழம்மாதுளையும் நல்லது.
 லெமன்அண்ணாச்சிப்பழம்பப்பாளி கூடவே கூடாது.
 மலச்சிக்கலும்மனசிக்கலும் தீர்க்கப்படவில்லை என்றால் குடலின் உட்சுவர்கள் பாதிப்புக்குள்ளாகும்.
(இக்கட்டுரை மாற்று மருத்துவம் ஜூலை 2009 இதழில் வெளியானது)

திங்கள், 9 டிசம்பர், 2013

சினைப்பை நீர்க்கட்டி ஹோமியோபதி மருத்துவம்

குழந்தை பெண்ணாய் பிறக்கும்போதே அதன் சின்னப்பைகளில் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை சினைமுட்டைகள் இருக்கிறது. குழந்தை வளர வளர இந்த எண்ணிக்கை குறைந்து 35000 முதல் 45000 ஆக குறைந்து விடுகிறது. மற்றவை சிதைந்து விடுகிறது. இருந்த போதிலும் ஒரு பெண்ணின் வாழ்நாளில் அவளது சினைப்பையில் 450லிருந்து 500 வரையிலான சினை முட்டைதான் முதிர்ச்சி அடைகிறது.
 சினைப்பை அடிவயிற்றில் கர்ப்பப்பையின் இருபுறமும் ஒவ்வொன்றும் இருக்கும். ஒவ்வொரு சினைப்பையும் திராட்சை பழ அளவில் இருக்கும். இச்சினைப்பைகளில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் அவள் வாழ்வில் உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு பொறுப்பேற்கிறது.
 சிறுமியாக இருந்து குமரி பருவத்தை எட்டும் காலத்தில் சுமார் 12 வயதிலிருந்து 15 வயதிற்குள் உடளவில் மாற்றம் ஏற்படத்துவங்குகிறது. மார்பகம் வெளிப்படையாக பெரிதாக வளரத் துவங்குதல். அக்குள் பாகங்களில், பிறப்புறுப்பு பாகங்களில் முடி முளைக்கத் துவங்குதல் போன்ற செயல்கள் நடைபெறுகிறது. இச்செயல்களுக்கு மூல காரணமாக இருப்பவை சினைப்பையில் உற்பத்தியாகும் பெண்களுக்கே உரிய முக்கியமான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டொரோன் எனும் இரு ஹார்மோன் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால்தான் பெண் பருவமடைகிறாள். பருவமடைந்த பின்பு மாதவிடாய் முற்று பெரும் வரை ஒவ்வொரு மாதமும் இந்த ஹார்மோன் உத்தரவுப்படிதான் கருத்தரிப்பதற்கான வாய்ப்பிற்கு தயார் ஆகிறாள்.
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செயல்பாடு.
 சினைமுட்டையை வெளியிடுவதற்கும், பெண் உடலில் தேவையற்ற முடி வளருவதை (முகத்தில் மீசை, தாடி) தடுக்கவும் குரலில் மாற்றமடைந்து ஆண் குரல் போல் ஆகாமல் இருக்கவும், மாதவிடாய் மாதமாதம் முறையாக வெளியாவதற்கும், விடாய் வெளியான 5வது நாளிலிருந்து 14ஆம் நாள் வரை இச் சுரப்பு அதிகமிருக்கும். சினைப்பையில் கருமுட்டை வளர ஆரம்பிக்கும். 14வது நாள் சினைமுட்டை சினைப்பையிலிருந்து வெளியேறி சினைக்குழாய் வழியே ஆண் மகனின் உயிரணுவை எதிர்பார்த்து தனது பயணத்தை துவங்கும் இந்நாளில் தம்பதியர் இணைவது கர்ப்பதரிப்புக்கு சாத்தியமாகும்.
ப்ரோஜெஸ்ட்ரோன்
 விடாய் வெளியான 14வது நாள் முதல் விடாய் வெளியாகும் நாள் வரை அதிகமாக இருக்கும். எதற்காக என்றால் கர்ப்பப்பையின் உள்ளே உள்ள ஜவ்வு அதிகமானதாக தென்படும். ஒரு வேளை தம்பதியர் ஒன்று கூடி கருத்தரிப்பு ஏற்படும் போது கருவை கர்ப்பப்பை தாங்கிக் கொள்ள ஏதுவாக மெத்தை போல் உட்புறச்சுவரை உருவாக்கவும், கருவாகவில்லை என்றால் உட்புற சுவருக்கு இரத்த ஓட்டம் குறையும். ஹார்மோன் உற்பத்தியும் குறையும். கர்ப்பப்பை உட்புற சுவரில் வந்து உட்கார்ந்த சினைமுட்டை ஆணின் உயிரணு தன்னை வந்து சேராததால் ஏமாற்றம் அடைந்து முதிர்ந்து கர்ப்பப்பை உட்வுற சுவர் சுருங்கி சதையும், இரத்தமுமாக சிலமாற்றங்கள் ஏற்பட்டு உதிர போக்காக வெளியாகும்.
சினைப்பை நீர்கட்டி அறிகுறிகள்
 மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வருவது, மூன்று மாதம், இரண்டு மாதம் என தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் விடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன. இதை Polycystic ovary disorder (Pcod) என்பர். இதை ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறிந்து அக்குப் பஞ்சர் சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம். மேலும் சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல. அக்குப்பங்சர், ஹோமியோபதி சிகிச்சை, உடற்பயிற்சி, உடல் எடையை குறைப்பது போன்ற முறைகளை கடை பிடித்தால் கருத்தரிப்பதிலும் குழந்தை பிறப்பதிலும் பிரச்சனை வராமல் தடுக்கலாம். மாத விடாயை ஒழுங்குபடுத்தலாம். சினைப்பை நீர்க்கட்டி இருந்தால் உடல் பருமன் ஏற்படும். மாதவிடாய் ஒழுங்குபடுத்த கொடுக்கப்படும் ஹார்மோன் மாத்திரைகளாலும் உடல் பருமன் அதிகரிக்கும். சினைப்பையில் உற்பத்தியாகும் முக்கிய இரு ஹார்மோன்களின் திருவிளையாடல்களே சினைப்பை நீர்கட்டி உருவாக காரணமாகிறது. சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுசிறு கட்டிகள் தோன்றக்கக் கூடும்.
சினைப்பை நீர்க்கட்டிக்கான அக்குப்பஞ்சர் புள்ளிகள் : DU:20, UB:60, CV:3, St:29, SP:6, K.3 10
ஹோமியோ மருந்துகள் : அபிஸ் மெல், காலிப்புரோமேடம், தூஜா
உணவு வகை - பழக்கம்
 இறைச்சி வகை தவிர்த்தல் நலம்
 சுரைக்காய், தண்டுக்கீரை, உணவில் சேர்த்தல் நலம்
 மாதுளம்பழம் சினைப்பை, கர்ப்பப்பை குறைபாடுகளை சீராக்க உதவும்.

மூலநோய்க்கு ஹோமியோபதி மருத்துவம்



உலகின் மக்கள் தொகையில் 500 நபர்களில் ஒருவருக்கு மூலம் தொந்தரவு உள்ளது. இருபது வயதிலிருந்து நாற்பது வயதுக்குட்பட்டோர்கள் ஓரளவு மெல்லமெல்ல மூலம் நோயாளியாக மாறி வருகிறார்கள். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மலச்சிக்கல் அதனுடன் தொடர்பு கொண்ட மூலம் நண்பனைப் போல் தொடர்பு கொண்டு அவ்வப்போது எதிரியைப் போல் இடையூறு செய்கிறது.
உடலில் உள்ள ஒவ் வொரு செல்களுக்கும் (cells) உணவாக ஆக்ஸிஜ னைக் கொண்டு செல்லும் பணி தமனியின் (Arteries) பணியாகும். இது தலை முதல் கால் வரை பரவி உள்ளது. இருதயத்திலிருந்து இரத்தம் தமனி வழியாக செல்லும் போது ஆக்ஸிஜனையும்உயிர் சத்துக்களை யும் எடுத்துச் செல்லும் பாதையில் குறிப்பிட்ட இடம் சென்று வேதியியல் மாற்றம் நிகழ்ந்து சிரைகள் (Venis) மூலமாக கரியமில வாயுவை எடுத்து வரும். தமனி - சிரை இவை இரண் டையும் இணைக்கும் சிறு இரத்த நாளங்களுக்கு தந்துகி (Capillaries) என்று பெயர்.
தமனியின் உட்சுவர் தடிமனாக உறுதியாக இருக்கும். ஏனென்றால் இருதயத்திலிருந்து இரத்தம் வெகு அழுத்தமாக வெளியேறும்போது இரத்தத்தை தாங்கும் பொருட்டு இயற்கையாகவே இவ்வாறு அமைந்துள்ளது.
சிரையின் உட்புறச் சுவர் மென்மையானது. உறுதியற்றது. உடல் முழுவதும் சிரைகள் உள்ளது. சில நேரங்களில் சிரை நாளங்களில் இரத்தம் அதிகளவில் அழுத்தமாக வரும்போது இரத்தம் நகராமல் தேங்கி நிற்கும் போது சிரைநாளங்கள் தளர்ந்து விரிவடைவதால் அசுத்த இரத்த குழாய் புடைத்தல் ஏற்படுகிறது. (Varicosevin) மலக்குடல் பகுதியில் உள்ள சுருக்கு தசையின் உட்பக்கம் இருக்கக் கூடிய சிரைகள் புடைத்து வீங்குவதால் மலக்குடலில் மூலம் உருவாகிறது. இது உள்மூலம் எனப்படுகிறது. ஆசனவாய் பகுதியில் சிரைகள் புடைத்து வீங்கும் போது வெளிமூலம் உருவாகிறது. மனிதர்களுக்கு இம்மாதிரியான இரண்டு விதமான மூல நோய்களும் ஏற்படுகிறது.
காரணம் :-
சிரைகள் அதிகமுள்ள இடங்களில் சிரைகள் மீது அழுத்தம் ஏற்படுவதாலும்மலசிக்கல்அதிக உடல் எடை அல்லது உடல் பருமன்கர்ப்பகாலம்ஆகிய மூன்று நிலைகளிலும் ஆசனவாய் பகுதியிலுள்ள சிரைகள் மீது அதிக அழுத்தம் ஏற்படுவதாலும்மலம் கழிக்கும் உணர்ச்சி ஏற்படும் போது மலத்தை வெளியேற்றாமல் அடக்கி வைக்கும் போது சிரைகள் மீது அழுத்தம் அதிகரிப்பதாலும்கோடைகாலங்களில் உடலில் தேவைக் கேற்ப தண்ணீர் அருந்தாமையாலும்,அதிக வியர்வையால் மலக்குடல்பெருங்குடல் பகுதியில் ஏற்படும் வறட்சியால் மலச்சிக்கல் ஏற்படுவதாலும்,முக்கியமாக நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களையும்கீரை வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளாமையாலும் அடிக்கடி இறைச்சி விரும்பி அதிகளவு உண்பதாலும்எல்லா வகையான உணவு உட்கொள்ளும் போதெல்லாம் ஊறுகாயை ருசித்து உண்பதாலும்,
கர்ப்பகாலத்தில் 6, 7வது மாதத்தில் கர்ப்பப்பை விரிவடையும் போது மலக்குடல் அழுத்தப்படுவதால்அப்போது மலச்சிக்கல் தோன்றி சிரை நாளங்கள் புடைப்பதாலும்சிலரின் வாழ்க்கைச் சூழல்வேலைத் தன்மைகள் காரணமாக ஓய்வு பெறும்வரை உட்கார்ந்தே பணிபுரிபவர்கள்ஓட்டுனர்கள்அடிக்கடி நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள்அதிக எடைகளை தனது சக்திக்கு மீறி தூக்குபவர்களுக்குசிரைகளில் அழுத்தம் உண்டாகி வீக்கம் ஏற்பட்டு மூலம் உருவாகிறது. இது மட்டுமல்லாமல் உயர் இரத்த அழுத்தம்நீரிழிவுநாட்பட்ட தீராத இருமல் இதர வேறுசில நோய்களுடன் அஜீரணத்துடன் மலச்சிக்கலும் தோன்றுவதால் மூலம் நோய் உருவாகிறது. உடலுழைப்பு உடற்பயிற்சி இல்லாத மனிதர்கள் மூல நோயிலிருந்து தப்புவது சிரமம்.
உள்மூலம் :
ஆரம்ப நிலையில் மலம் கழிக்கும் போது லேசான வலியுடன் இறுக்கமான உணர்வு இருக்கும். மலக்குடலில் சிறிய உருண்டையாக வளர்ச்சி பெறும்போது முக்கி மலம் கழிக்கும் போது உருண்டை சதையானது மலக்குடலிருந்து வெளியே வரும்போது ஆசன வாயில் வலி அதிகமாகும். இதனால் ஆசன வாயிலிருந்து இரத்தம் வரும். ஆசனவாய்க்கு வெளிப்புறமாக வந்த உருண்டை சதையை விரல்களின் உதவியால் உள்ளே தள்ளிவிட வேண்டியதிருக்கும். உள்மூலம் முற்றிய நிலையில் ஆசனவாயின் உட்புறம் வீங்கியிருந்த வீக்கம் பெரியதாகி விட்டால் மலம் கழிக்கும்போது தாங்க முடியாத வலியும்இரத்தப் போக்கும் ஏற்படும். மூல வீக்கம் ஆசனவாய்க்கு வெளியே முழுமையாக வந்துவிட்டால் விரலை வைத்து உள்ளே தள்ளமுடியாது. இதில் ஒருவிதமான ஈரமான சவ்வுப்படலம் மூலக் கட்டியை மூடியிருக்கும். இந்நிலையில் ஆசன வாயில் புண் போன்ற வலியும்இரத்தக் கசிவும்ஈரப்பதமும் இருக்கும்.
வெளிமூலம் :
ஆரம்ப நிலையில் ஆசனவாய் துவாரத்தை சுற்றி பரவி இருக்கும் சிரைநாளங்களில் ஃ ஆயுத எழுத்து போன்ற மிளகு போன்ற வடிவத்தில் மூன்று சிறிய வீக்கமிருக்கும். இதனால் மலம் கழிக்கும் போது வலி இருக்கும். 2வது நிலையின் போது மிளகு வடிவில் இருந்த மூன்று வீக்கமும் வெளிப்பார்வைக்கு தெரியும்படி சற்று பெரிய வீக்கமாக காணப்படும் போது வலியும் வேதனையும் முன்பு இருந்ததை விட அதிகரிக்கும். மலம் கழிக்கும் போது மேலும் கடுமையாகும். மலம் கழிக்கும் நேரத்தில் வேதனையால் அலறுவார். மலங்கழிக்க வேண்டுமென்ற நினைப்பு வந்தாலே பயப்படுவார். வீக்கத்திலிருந்து ஒருவித நிறமற்ற திரவக்கசிவு ஏற்பட்டு ஆசனவாயில் நமைச்சல் ஏற்படும். இந்நிலையில் நோயாளி உட்காரவும்நிற்கவும் முடியாமல் சிரமப்படவேண்டியதிருக்கும். மேலும் வலியுடன் கூடிய ஒரு பந்தின் மீது உட்கார்ந்துள்ள உணர்வு ஏற்படும். ஆசனவாய்ப் பகுதியில் வெடிப்பும்இறுக்கமும் ஏற்படும்.
சிகிச்சைகள் :
ஆங்கில மருத்துவ முறையில் பொறுத்த வரையில் கிருமி கொல்லி மாத்திரைகளும்வீக்கத்தைக் குறைப்பதற்கான மாத்திரைகளும் மலச்சிக்கலை போக்கி வயிற்றுப்போக்கு ஏற்படுத்துகிற மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. இதன்பின்பும் பிரச்சனை தீரவில்லையெனில் அறுவை சிகிச்சை செய்து தற்காலிக நிவாரணம் வழங்கப்படுகின்றன.
ஹோமியோபதி மருத்துவமுறை மட்டுமே நோயாளியின் மன உணர்வுகள்உடல்வாகுகாரணம்பணியின்தன்மை,உணவுப் பழக்கம்நோயின் தீவிரத் தன்மையை பொறுத்தும்நோயறி குறிகளை மனதில் கொண்டும் சிகிச்சையளிக்கப்படுவதால் உடனடி நிவாரணமும் விரைவில் முழுநலமும் பெறலாம்.
மூல நோயாளிக்கு பயன்படும் ஹோமியோ மருந்துகள் சில ...
லா - உள்மூலம்இரத்தம் கொட்டும் ஆசன வாயிலிருந்து திராட்சை குலைபோல் வெளியே வரும். அதிகவலிஅரிப்பு,எரிச்சல் இருக்கும் குளிர்ந்த நீரினால் துயர்தணியும். இரவில் தூக்கம் கெடும் காற்று பிரியும்போது மலம் வெளியேறும்.
மூரியாடிக் ஆசிட்    - ஆசனவாயிலிருந்து திராட்சை கொத்து போன்ற மூலம் தொடமுடியாதபடி கடுமையான வலி,எரிச்சல்ஆசனவசாய் அரிப்பு குளிர்ந்த நீரினால் அதிகரிக்கும்வெந்நீரினால் தணியும் சிறுநீர் பிரியும்போது உணர்வின்றி மலமும் பிரியும்.
காலி.கார்ப்     - இரத்தப்போக்குடன் உள்ள உள் மூலம்பெரியளவில் வீங்கி இருக்கும் எரிச்சல் தொடமுடியாதபடி வலி கத்தியால் குத்துவது போன்ற வலிநெருப்பு போல் எரிச்சல்குளிர்ந்த நீரில் உட்கார்ந்தால் தணியும். மலம் கழிக்கும் முன் ஒருமணி நேரத்திற்கு முன்பு ஆசனவாயில் குச்சியால் குத்துவது போன்ற வலி.
நக்ஸ்வாமிகா - இரத்தமூலம்இரத்தமில்லாத மூலம் இரண்டுக்கும் பயன்தரும். வயிறுவலியுடன் அடிக்கடி மலம் கழிக்க தூண்டும் உணர்ச்சிபோய் உட்கார்ந்தால் சிறிதளவு மலம் மட்டும் வெளியாகும்.
சல்பர் - வலியில்லாத மூலம்
ஹமாமெலிஸ் -     இரத்த மூலம் மலம் கழிக்கும்போது ஏராளமாக இரத்தம் வரும் மூலத்தில் எப்போதும் புண் போன்ற வலிஇரத்தம் அடர்த்தியாக கரு நிறத்தில் இருக்கும்.
அம்-கார்ப் - மலம் கழித்த பின் ஏற்படும் இரத்தப் பெருக்கு.
கோலின்சோனியா - உள்ளே இருந்து வெளியே தள்ளும் மூலம். மணலும்குச்சிகளும் மலக் குடலில் நிரம்பியுள்ள உணர்ச்சிஅதிகளவு இரத்தப்போக்கு இல்லாவிட்டாலும் விட்டுவிட்டு இரத்தப்போக்கு ஏற்படும். மிகக்கடுமையான மலச் சிக்கல். குறிப்பாக கர்ப்பகால மலச்சிக்கல்வறண்டமலம்ஆசனவாய் அரிப்புவயிற்று போக்கும் மலச்சிக்கலும் குறிப்பாக வயதானவர்களுக்கு மாறிமாறி வரும்.
எஸ்குலஸ் - மிக நாட்பட்ட மூலம். கோலின்சோனியா குணமாக்கி விட்டபின்பு இது உதவும்.
ப்ரோமியம்     - இரத்தம் இல்லாத மூலம்மலம் கழிக்கும் போதும்பின்பும் கடும் வலிஅந்த இடத்தில் நோயாளியின் உமிழ்நீரை தடவினால் வலி குறையும்.
ரட்டானியா - மூலம் உள்ளிருந்து பிதுங்கி வரும்போது வலிஎரிச்சல் கடுமையாக நீடிக்கும். பல மணிநேரம் இருக்கும். மலக்குடலில் கண்ணாடி துண்டுகளில் உட்கார்ந்த உணர்வுகுளிர்ந்த நீரை பயன்படுத்தினால் துயர் தணியும்.
நைட்ரிக் ஆசிட் - மிருதுவான மலத்தைக் கூட வெளியேற்றுவதற்கு முன்பும்பின்பும்      நீண்டநேரம் கடும்வலிஎரிச்சல்,அதிக இரத்தப்போக்குஒவ்வொருமுறை மலங்கழித்த பின்பும் பலவீனமாக உணர்தல்மூலம் வெளியேறும் சமயத்தில் ஆசனவாயில் வெடிப்புக்கள் ஏற்படுதல்.
புளோரிக் ஆசிட் - வெளிமூலத்திற்கு முக்கிய மருந்து. வேறுசில தீவிர மருந்துக் குறிகள் இருந்து குணமான பின் வீக்கம் மட்டும் இருத்தல்.
இக்னேஷியா - குத்தும் வலியுள்ள மூலம்மலம் கழித்தபின் வெளியே பிதுங்கிய சதையை உள்ளே தள்ள வேண்டிய நிலை. உட்கார்ந்தால்இருமினால் வலி அதிகரிக்கும்.
சிலிகா - ஈரக்கசிவும்அதிக வலியும் உள்ள மூலம். கடின மலம் வெளியே வந்து சிறிது மலம் மீண்டும் உள்ளே சென்றுவிடும். மலம் கழித்து வெகுநேரம் வலி இருக்கும்.
மூல நோயாளிகளுக்கு இயற்கை மருத்துவ ஆலோசனைகள் :
 இரத்தமூலத்திற்கு பசும்பால் கறந்தவுடன் மேலிருக்கும் நுரையை எடுத்து எலுமிச்சை சாறு கலந்து காலைமாலை இருவேளை பருகினால் 3லிருந்து 7 நாட்களுக்குள் இரத்தப் போக்கு நிற்கும்.
 நீண்ட நாள் இரத்த மூலத்திற்கு தயிரில் வெங்காயத்தை ஊறவைத்து தினம் இருவேளை சாப்பிட்டால் நல்லது.
 எல்லா வகையான மூலத்திற்கும் தொட்டால் சிணுங்கிசெடிஇலைதண்டுவேர் இவைகளை கசாயமாக செய்து அருந்தலாம். வலிவீக்கம் குறையும்.
 எல்லா வகையான மூலத்திற்கும் கிரந்தநாயகம் இலையை பருப்புடன் சேர்த்து கூட்டுசெய்து சாப்பிட்டால் வலிவீக்கம் இரத்தப்போக்கு தணியும்.
 வெங்காய சாறுடன் நெய் அல்லது நாட்டுசர்க்கரை கலந்து பருகினால் விரைவில் குணம் பெறலாம்.
 கொதிக்கும் நீரில் மாதுளம்பழ விதை சிலவற்றை போட்டு சிறிது நேரத்தில் இறக்கி தேநீர் போல் அருந்திவர விரைவில் குணம் பெறலாம்.
 மூலம் வலி நீங்க சிறிதளவு பாலில் வாழைப்பழம் சேர்த்து கடைந்து ஜாம் போல் செய்து சாப்பிட்டு வர வலி நீங்கும்.
 பாகற்காய் இலையை சாறெடுத்து மோருடன் கலந்து காலைமாலைபருகிவர நல்ல பலன் கிடைக்கும்.
 வலியுள்ள இடத்தில் முருங்கை இலையை அரைத்து பூசலாம்.
 மாங்கொட்டையிலிருக்கும் விதையை பவுடராக்கி இரண்டு ஸ்பூன் வீதம் தினம் இருவேளைதேன் கலந்து சாப்பிடலாம்
- Dr. க. வெள்ளைச்சாமி, RHMP, RSMP
விருதுநகர். Cell : 98947 48449

மலர்மருத்துவம் [பழக்க வழக்க அடிமை நீங்க... ]


புறச்சூழல் செல்வாக்கினால் மனபாதிப்படையும் மனிதர்களுக்கு Dr.எட்வர்டு பாட்ச் அக்ரிமோனிசென்டாரிவால்நாட்,ஹால்லி ஆகிய நான்கு மருந்துகளை சிபாரிசு செய்கிறார். இப்போது நாம் வால்நாட் (Walnut) மலர்மருந்து புறச்சூழல் செல்வாக்கில் பாதிப்புக்குள்ளாகும் எம்மாதிரியான மனநிலையை சீராக்குகிறது என்பதை அறிவோம்.
 சூழ்நிலை மாற்றத்தை ஏற்க இயலாத மனநிலை.
 பழகிய விசயங்கள்பழகிய மனிதர்களைபழகிய இடங்களைவிட்டுப் பிரிய முடியாத தவிப்பு.
 சூழ்நிலை மாற்றங்களைப் போலவே உடலில் ஏற்படும் பருவ வளர்ச்சி மாற்றங்களால் பாதிப்படைதல்.
 தீய பழக்கங்களுக்கு அடிமையாதல் மூடப்பழக்க வழக்கங்கள் குருட்டு நம்பிக்கைகளில் மூழ்கி கிடத்தல்.
பல ஆண்டுகள் ஒரு தெருவில் குறிப்பிட்ட வீட்டில் குடியிருந்து விட்டு அடுத்த ஊருக்கு மாற்றுதலாகி வீட்டை காலி செய்து விட்டு போகும்போது அக்கம் பக்கத்தில் குடியிருப்போர்களை விட்டுபழகிய நபர்களை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உள்ளதே என்று மனங்கலங்குபவர்கள்.
புதிய வீட்டில் புதியதொரு சூழலில் அங்குள்ள நிலைமையை ஏற்றுக் கொள்ளாத மனநிலை ஏற்படும்போதும் வழக்கமாக தூங்கிய இடத்தை விட்டுவிட்டு புதிய இடத்தில் படுத்திருப்பதால் தூக்கமின்றி தவிப்போர்கள்ஒரு சில நாட்களுக்கு மலச்சிக்கல் ஏற்படலாம். புதிய நீர் ஒத்துக்கொள்ளாமல் தொண்டை அலர்ஜி போன்ற உடல் உபாதைகள் தோன்றும் போது வால்நாட் சில உருண்டைகளை சில வேளைகள் சுவைத்து சாப்பிடும்போது புதிய சூழ்நிலையோடு ஒத்துப்போகும் மனநிலை உருவாகும். பெண்ணை திருமணம் செய்து கொடுத்து புகுந்த வீடு அனுப்பும் போது பெற்றோர்,உடன்பிறந்தோர்களுக்கு ஏற்படும் மனதவிப்புக்கும்பெற்றோர்உற்றோரையும் பிரிந்து செல்கிறோமே என்று புதுமணப் பெண்ணுக்கு ஏற்படும் தாங்க முடியாத பிரிவின் தவிப்பிற்கு வால்நட் வரப்பிரசாதம்.
பழகிய பழைய காதலைகாதலியை மறக்க முடியாமல் நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா. பழகத் தெரிய உயிரே உனக்கு விலக தெரியாதாஎன்ற பாடலுக்கு பொருத்தமான மனநிலையை சீர் செய்ய வால்நாட் உதவும்.
சிலருக்கு வாழ்க்கை சூழல் அலுவலக பணியின் தன்மை காரணமாக வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும் போது தங்குமிடம்அங்குள்ள உணவு முறைகள்தண்ணீர் போன்றவை ஒத்துக்கொள்ளாமல் உடல் ரீதியாக ஏற்படும் கோளாறுகளுக்கு வால்நட் பயன்படும்.
புதிதாக திருமணமாகி புகுந்த வீடு செல்லும் மணப்பெண்களுக்கு அங்குள்ள சூழ்நிலையோடு ஒத்துப் போகவும்,மாமனார்மாமியார் மற்றும் உறவினர்களை எளிதில் புரிந்து கொண்டு புதிய குடும்பச் சூழ்நிலையோடு சகஜமாக கூச்சமின்றி பழகி ஒன்றினைய வால்நட் உதவும். எனவே புதுமணப் பெண்ணுக்கு சீர்வரிசைகளுடன் வால்நட் கொடுத்தனுப்புவது நல்லது.
சூழ்நிலை மாற்றங்களைப் ஏற்காத மனநிலையைப் போலவே உடலின் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்தில் ஏற்படும் மாற்றத்தின் போதும் வால்நட் உதவும். பிறந்த குழந்தை குப்புறப் புரண்டு படுக்கும்போதும்தவழ்ந்துஎழுந்து நிற்க,நடக்கமுயற்சிக்கிறபோதுபல்முளைக்கும் போதும்பள்ளி செல்லும் வயதில் தினம்தோறும் விரும்பி பள்ளி செல்ல தயார் ஆகவும்பெண்பிள்ளைகள் குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்திற்கு மாறுகிறபோதுஉடலளவில்,மனதளவில் ஏற்படும் மாற்றங்களை சரி செய்திடும் அற்புத மலர் மருந்து வால்நட்.
குமரியாக இருந்தவள் மனைவியாககுடும்பத் தலைவியாககர்ப்பிணியாக தாய்மையடைந்துகுழந்தைக்கு பாலூட்டும் போதும் மாதவிடாய் நிற்கும்காலத்தில் உடலளவிலும்மனதளவிலும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உதவும் வால்நட். ஆண்களுக்கும் வாலிபப் பருவத்திலும்திருமணமானபின்பு குடும்பத் தலைவராக பொறுப்பேற்று குடும்பத்தை வழிநடத்துகிறபோதும் புதியபுதிய சூழ்நிலைகளை சிந்தனை தெளிவுடன் சமாளித்திட வால்நட் பயன்படும்.
தவறான தீய பழக்க வழக்கங்களை மாற்றியமைத்திடவும் நெடுநாள் பழகிய விசயங்கள் தவறானது என்று தெரிந்தும் விடமுடியாமல் தவிப்போர்கள்திருமணமானபின்பும் பல பெண்களுடன் பாலியல் தொடர்புகளை துண்டித்து கொள்ளாமலிருப்பவர்கள் மற்றும் சுயஇன்ப பழக்கத்திலிருந்து விடுபட இயலாமையால் மனம் வாடுவோர்க்கும் கைசூம்பும் பழக்கமுள்ள குழந்தைகள்தாய்பாலை மறக்காமல் உள்ள குழந்தைகள்படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கமுள்ள குழந்தைகள்மது பழக்கம்புகை பழக்கம் மற்றும் இதர  போதைப் பழக்கங்களை கைவிட முடியாமல் தவிப்போர்களுக்கு வால்நட் நல்வழி காட்டும்.

வெள்ளி, 6 டிசம்பர், 2013