வெள்ளி, 21 மார்ச், 2014

ஆர்சனிக்கம் அற்புதம் நிகழ்த்தியது.

என்னிடம்  மருத்துவம் ஆலோசனை பெற்று வரும் சரோஜா என்பவரின் 35 வயது நிரம்பிய மகள் ரேணுகா விற்கு அதிகாலையிலிருந்து வயிறு வலியால் மிகுந்த அவதி படுவதாகவும் ஹோமியோபதி மருந்து அவரது கனவரிடம்  கொடுத்து உதவுங்கள் என்று  செல் பேசி முலம் கேட்டுக்கொண்டார்.  வயிறு வலி தொடர்பான சில விபரங்களை கேட்டு விட்டு  அவரது கனவரிடம் வயிறு வலிக்கான மருந்துகளை கொடுத்து அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழித்து வயிறு வலி குறையவே இல்லை. நேரில் வந்து மகளை பார்த்து சிகிட்சையளிக்குமாறு ம் அக்குப்பங்சர் சிகிட்சை வழங்க முடியுமா? என கேட்டார்.   செல் பேசியில் ரேணுகாவிடம் சில விபரம் கேட்டபோது  சிறுநீரககல்லினால்  ஏற்பட்ட வயிறு வலி என்பதை யூகிக்க முடிந்தது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                   உடனே வருகிறேன்.என்று அக்கு ஊசிகளூம் சிறுநீரகல் கோளாறுகளுக்கான  ஹோமியோபதி மருந்துகளும் எடுத்து சென்றேன்.அக்குபங்சர் போட்டதும் சில விநாடிகளில் வயிறு வலி குறைந்தது.கொண்டுபோன மருந்துகளையும் பயண் படுத்தினேன். சிறிது நேரம் மட்டும் குறைந்த வயிறு வலி மீண்டும் தலை தூக்கியது.நான் எதிர் பார்த்த பலன் கிடைக்க வில்லை.                                                                                                                                 ரேணுகாவின் நடவடிக்கைகளை உண்ணிப்பாக கவணித்தேன்.வலிதாங்கமுடியாமல் கட்டிலில் படுக்கிறார், சில விநாடிகளில் எழுந்து  தனது அம்மாவின் தோளில் சாய்கிறார்.பின் அக்காவின் தோளில் சாய்கிறார்.அமைதியற்ற தன்மையை காண முடிந்தது.  வயிறு வலியுடன் எரிச்சல் உள்ளதா? என கேட்டேன் இல்லை என்றார்.                                                     இவருடைய நடவடிக்கைகள்: ஆர்சனிக்கம் ஆல்பம்” என்ற ஹோமியோபதி மருந்தை சுட்டி காட்டுகிறதே. ஆனால் ஆர்சனிக்கத்தின் மற்றொரு முக்கிய குறியான எரிச்சல் இல்லையே என யோசித்தேன்.ஒரு மருந்தின் மிக முக்கியமான குறிகளில் ஒன்று அதுவும் பல மான குறியாக அமைந்துவிட்டால் வேறு அறிகுறிகளை ஆராயவேண்டாம் ..அம் மருந்தே அந் நபரை முழுமையாக குணப்படுத்தும்.என்ற ஹோமியோபதியின் தந்தை ஹானிமனின் பொன்மொழி நினைவுக்கு வந்தது.                                                                                                                  சற்றும் தாமதியாமல் மருத்துவமனை வந்து :ஆர்சனிக்கம் ஆல்பம்: 200 வது வீரியத்தில் 10 மாத்திரையை 50 மில்லி தண்ணீரில் கலக்கி ஒருஸ்டீஸ் பூன் அளவு குடிக்க செய்தேன். இரண்டு நிமிடத்தில் தூங்கி விட்டார். நாணும்  பத்து நிமிடம் ரேணுகாவை பார்த்து கொண்டே கனவர்,அக்கா,அம்மா, அப்பா ஆகியோருடன் பேசிக்கொண்டேயிருதேன். ரேணுகா ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிட்டார் மறு வேளை மருந்து தேவைப்படவேஇல்லை.                                                                                                              இது என்ன தூக்க மருந்தா எனக் கேட்டார்கள் வீட்டில் இருந்தவர்கள். இவ்வளவுநேரம் வலி தாங்கமுடியாமல் போரடிக்கொண்டிருந்தார்.இப்போது வலி குறைந்து விட்டது. போரட்டக் களைப்பினால் தற்போது உடல் அமைதி பெறுகிறது. அதனால் ஆழ்ந்து தூங்குகிறார்.   ஆர்சனிக்கம் ஆல்பம் நிகழ்த்திய அதிசயத்தை பார்த்து அசந்து போனேன்.

2 கருத்துகள்:

  1. Pen kuri Veekathiruku karanam therinthal solungal oru mathamaga ean manaiviku intha pirachanai iruku athai epadi sari seivathu mathavidai mudinththum Veekam vattri pinpu 2 varaththil marupadium varukirathu ithu vali earpaduthukirathu

    பதிலளிநீக்கு
  2. Pen kuri Veekathiruku karanam therinthal solungal oru mathamaga ean manaiviku intha pirachanai iruku athai epadi sari seivathu mathavidai mudinththum Veekam vattri pinpu 2 varaththil marupadium varukirathu ithu vali earpaduthukirathu

    பதிலளிநீக்கு